மாமல்லபுரம் கடற்கரை மணல் அரிப்பு: தென்பட்டதா பழங்கால கோவில்?
மாமல்லபுரத்தில் கடற்கரை மணல் அரிப்பு ஏற்பட்டு பழங்கால கோவில் தென்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ காலத்தில் இருந்த பல்வேறு சிறப்பு மிக்க சின்னங்கள், கிராமிய மற்றும் பல்வேறு கோவில்களில் நினைவுச் சின்னங்களும் இடம்பெற்றுள்ளது. ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களின் காரணமாக அத்தகைய சின்னங்கள் பூமிக்கடியில் புதைந்து விட்டன. ஆனால் தற்போது மாமல்லபுரம் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்ட பழங்காலத்தில் இருந்த கோவில் படிமங்கள் தற்போது தென்பட்டுள்ளது. மேலும் அங்கு மணல் அரிப்பு ஏற்படுவது கடல் உள்வாங்கியது போன்ற பல்வேறு செயல்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் தற்பொழுது கடல் மண்ணரிப்பு காரணமாக தற்பொழுது பழங்கால கோவில்களின் படிமங்கள் தென்பட்டுள்ளது பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.மேலும் இந்த கோவில் அருகில் மகிஷாசுரமர்த்தினி ஒட்டிய பகுதிகளில் குடவரை கோவில் வரை மண் அரிப்பு ஏற்பட்டு சிதைவுகள் வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பழங்கால கோவிலில் கோபுர கலசங்கள், கோவிலில் உள் சுவர்கள், களிமண் பூச்சுகள், சேதமடைந்த சிலைகள் என பலவும் வெளியே தெரியும் வண்ணம் காட்சியளிக்கின்றன.
மேலும் இவற்றை ஆவலுடன் பார்க்க வரும் பொதுமக்கள் தரப்பில் இதுபற்றி கூறுகையில், "இங்கு கோவில் இருக்கிறது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டால் இந்த இடத்தில் எந்த வகையான கோவில் அமைந்து இருந்தது என்பதையும் கண்டுபிடிக்க இயலும்" என்று அவர்கள் கூறுகிறார்கள். மாமல்லபுரம் அடுத்த ஸ்டாலோன் குப்பத்தில் ஏற்கனவே 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சுனாமி பேரழிவில் பல்வேறு கோவில்களில் புதைக்கப்பட்டது. மேலும் காலப்போக்கில் மண்ணரிப்பு ஏற்பட்ட பல கோவில்களில் புகைப்படங்கள் தென்பட்டன. அதேபோல் தற்போது மாமல்லபுரத்தில் மணல் அரிப்பின காரணமாக பழங்கால கோவில் தென்பட்டுள்ளது.
Input & Image courtesy: Twitter Post