இந்தியா தன் இலக்கை அடைவதை யாராலும் தடுக்க முடியாது: RSS தலைவர்!

இந்திய தன்னுடன் முன்னேற்றப் பாதையில் இலக்கை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று RSS தலைவர் மோகன் பகவத் கூறினார்.

Update: 2022-04-16 14:15 GMT

சமீபத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் RSS தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். "கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி, இந்தியா எழுச்சி பெறும் என்றும் தத்துவ ஞானி அரவிந்தர் கூறியுள்ளார். இந்தியா குறித்து அரவிந்தர் மற்றும் சுவாமி விவேகானந்தர் கூறியதில் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தியா குறித்து சுவாமி ரவிந்திர புரி கூறியதில் முழு நம்பிக்கை உள்ளது. அவர் கூறியது போல் நிச்சயம் நடக்கும். அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும்" விரைவில் அது நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 


நமது இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைய 20 - 25 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், நாம் ஒருங்கிணைந்து பணியாற்றினால், தற்போதைய வேகத்தை கூட்டினால், இலக்கை அடைவதற்கான நேரம் பாதியாகக் குறையும். மேலும் இதுபற்றி பகவத்கதையில் கூறுகையில் நல்லது செய்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மேலும் பகவான் கிருஷ்ணர் கூறியதும் நாம் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 


தீங்கு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மக்களையும் இந்தியா வரவேற்றுள்ளது. மேலும் வரவேற்க தயாராக உள்ளது. அந்த வகையில் இந்தியா தனது இலக்கை அடைய எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது. நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து கொண்டு செல்பவர்கள் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Input & Image courtesy: Malaimalar news

Tags:    

Similar News