பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் மீது NRI சகோதரி பகீர் குற்றச்சாட்டு!
பஞ்சாபின் மாநில காங்கிரஸ் தலைவர் ஆன நவ்ஜோத் சிங் சித்து மீது அவருடைய NRI சகோதரி பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
தற்போது பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங் சித்து மீது, அவருடைய வெளிநாட்டில் வசித்து வரும் NRI சகோதரி ஆன சுமன் துர் தற்பொழுது சகோதரருக்கு முன் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "1986-ல் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, குடும்பச் சொத்தை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர் தங்கள் தாயை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும்" அவரது NRI சகோதரி சுமன் துர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இந்த குற்றச்சாட்டை பற்றி அவர் கூறுகையில், "1986 இல் தந்தை இறந்த பிறகு தன்னையும் அவர்களின் தாயையும் வீட்டை விட்டுத் துரத்தியதாகக் குற்றம் சாட்டினார். மேலும் பணம் மற்றும் சொத்து ஆசைப்பட்டு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு உள்ளதாக அவர் கூறினார். மேலும் மகனின் இத்தகைய செயல்கள் அடக்கமுடியாமல் அழுதுகொண்டே, துர் அவர்களின் தாயார் தன் மகனால் கவனிக்கப்படாமல் இறந்து போனார்" என்ற செய்தியும் வெளிப்படுத்தினார். அவர்களின் தாயார் 1989-ஆம் ஆண்டு டெல்லி ரயில் நிலையத்தில் கவனிப்பாரற்று இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நவ்ஜோத் சிங் சித்துவைத் தொடர்புகொள்ளும் முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. அடுத்ததாக நான் செய்தியாளர் சந்திப்பில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "அவர் என்னை போனில் பிளாக் செய்துவிட்டார். என் அம்மாவுக்கு நீதி வேண்டும்" என்று சுமன் துர் கூறி சகோதரன் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்து முக்கியமான சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் முதல்வர் பதவிக்கு சித்து போட்டியிடும் நேரத்தில் அவர் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகள் வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Input & Image courtesy: Opindia