மத்திய நேரடி வரி ஆணையம்(CBDT) தற்பொழுது இந்தியாவில் உள்ள NRIகளுக்காக ஒரு சலுகை அளித்துள்ளது. தற்போது உள்ள வைரஸ் தொற்றின் காரணமாக உலகில் பல பகுதியில் வசிக்கும் தமிழர்கள், தங்களுடைய சொந்த நாடுகளில் அதாவது இந்தியாவில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் NRIகளான இவர்கள் 182 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்கள் கடந்த நிதி ஆண்டில் அதாவது 2020-21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி எந்த நாட்டிற்கு செலுத்த வேண்டும்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடை அளிக்கும் விதமாக மத்திய நேரடி வரிகள் வரி ஆணையம் NRIகளுக்கும் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு தற்போதும் ஒரு சலுகை வழங்கியுள்ளது. அதாவது அவர்கள் செலுத்த வேண்டிய வரியின் காலக்கெடுவை மார்ச் இறுதி வரை நீட்டிக்கிறது. ஆகவே தங்கள் சொந்த நாடுகளில் இருந்து தாங்கள் வேலை பார்க்கும் நாடுகளுக்கு செல்வதற்கு தற்போது சர்வதேச விமானிகளின் விமானங்கள் தடை ஏற்பட்டுள்ள காரணத்தினாலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தங்குகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் இரட்டை வரிவிதிப்பிற்கு ஆளாவார்கள்? என்ற கேள்வி எழுகிறது. இரட்டை வரிவிதிப்பு என்றால் ஒருவர் தான் சம்பாதிக்கும் நாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு வரியை செலுத்த வேண்டும் (அல்லது) ஒருவர் ஒரு நாட்டில் 182 நாட்களுக்கும் மேலாக தங்கினால், அவர் அந்த நாட்டில் தான் சம்பாதித்த பணத்திற்கு முறையாக வரியை அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும்.
இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இரு நாடுகளிலும் வரியை செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது உள்ளார்கள். இந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக மத்திய நேரடி வரி ஆணையம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தாங்கள் வேலை பார்க்கும் நாட்டில் வரி செலுத்தினால் இங்கு வரி செலுத்த தேவையில்லை என்ற ஒரு மகிழ்ச்சியான செய்தி தெரிவித்துள்ளதோடு இதன் மூலம் அவர்கள் இரட்டை பாதிப்பிற்கு ஆளாக மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒருவேளை அவர்கள் இரண்டு நாடுகளிலும் வரி செலுத்தி இருந்தால், அவர்களின் சொந்த நாட்டில் செலுத்தியிருந்த வரி அவர்களுக்கு திருப்பி தரப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.