NRIகள் வெளிநாட்டு மதிப்பில் இங்குள்ளவர்களுக்கு பணம் அனுப்புவது சாதகமா?

Update: 2021-03-14 11:11 GMT

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறையும் போது இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ள அதே நேரத்தில் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் NRIகளுக்கு இது மிகப் பெரிய வர பிரசாதம் ஆக அமைந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள NRI இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களுக்குப் பணத்தினை டாலர் மதிப்பில் அனுப்பும் போது 1 டாலருக்கு அதிகமாக இந்திய மதிப்பு ரூபாயை பெறுவார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், ஒரு டாலர் இந்திய மதிப்பு 70 ருபாய் பெறுவார்கள். ஆகவே வெளிநாட்டு வேலை பார்க்கும் பொழுது, வேலை பார்க்கும் நாட்டிலிருந்து பணம் மதிப்பை இந்தியாவிற்கு அனுப்பும் பொழுது அது ஒரு விதத்தில் சாதகமாகத்தான் அமைய செய்கிறது.


அன்னிய செலாவணி இந்தியாவிற்கு அதிகளவிலான அன்னிய செலாவணி வரவும் வாய்ப்புகள் உள்ளது என்றாலும் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற நிலைக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. எண்ணெய் நிறுவனப் பங்குகள் மேலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்து வரும் முதலீட்டாளர்கள் எண்ணெய் நிறுவனப் பங்குகளை அதிகளவில் வாங்கும் போது அதிக லாபங்களைப் பார்க்கலாம்.


பயன் அடையும் ஏற்றுமதி நிறுவனங்கள் ரூபாய் மதிப்பு சரியும் நேரங்களில் இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் போது குறைந்து விலைக்குச் சர்வதேச சந்தைக்குச் செல்லும். அதன் மூலம் இந்திய பொருட்கள் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுவது மட்டும் இல்லாமல் பெரிய அளவிலான சந்தையினையும் பெறும்.

Similar News