NRIகளுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு சாதகமாக இருக்கிறதா?

Update: 2021-03-15 11:51 GMT

சிங்கப்பூர், மலேசியாவிற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் பட்டியலில் வளைகுடா நாடுகள் உள்ளது. அதிலும் தென் மாநிலங்களில் இருந்து வேலைக்காவும், வர்த்தகத்திற்காகவும் வளைகுடா நாடுகளில் செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்நிலையில் குவைத் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீத மக்கள் வெளிநாட்டினர் என்பதால் இதைக் குறைக்க வேண்டும் எனச் சில மாதங்களுக்கு முன் முடிவு செய்தார் குவைத் பிரதமர் ஷேக் சபா அல். 


 இதன் படி குவைத் அரசு உருவாக்கிய வெளிநாட்டினரை வெளியேற்றம் செய்யப்படும் மசோகா குவைத் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது. இதனால் இந்தியர்கள் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளனர். இந்தியர்கள் குவைத் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற மசோதாவின் படி குவைத் நாட்டில் இருக்கும் இந்திய மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் தாண்டக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குவைத் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து இந்த மசோதாவை அமலாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


 8 லட்சம் பேர் தற்போது குவைத் நாட்டில் இருக்கும் 43 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 30 லட்சம் பேர் வெளிநாட்டினர், இதில் 14.5 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டதிட்டத்தின் படி மொத்த மக்கள் தொகையில் இந்திய மக்கள் தொகை 15 சதவீதம் தாண்டக் கூடாது என்பதால் தற்போது இருக்கும் 14.5 லட்சம் இந்தியர்களில் சுமார் 7 முதல் 8 லட்சம் பேர் குவைத் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.

Similar News