இலவசமாக ஆம்புலன்ஸ் சேவையை வழங்கிய NRI தொழிலதிபர்!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் வருடத்தைக் கொண்டாடும் விதமாக இலவசமாக NRI தொழிலதிபர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார்.

Update: 2022-02-09 14:28 GMT

மும்பையைச் சேர்ந்த NRI தொழிலதிபர் பரோபகாரர்பஷீர் ஹஜ்வானி அவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது வருடங்களின் தனித்துவத்தை கொண்டாடுகிறார். மேலும் இவர் மும்பையில் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் காரணமாக தனது அவர் தனது 20 ஆம்புலன்ஸ்களை மும்பையில் இலவசமாக இயக்கியுள்ளார். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு இலவசம், குறிப்பாக ஜனவரி 26 முதல் பிப்ரவரி 26 தேதி வரை ஒரு மாத காலத்திற்கு இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை தொடங்கி வைத்துள்ளார். நாம் சுதந்திரமடைந்து 75வது ஆண்டில் இருக்கிறோம். இதை அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம். 


இதைப்பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "நமது தேசத்தின் பயணத்தில் இந்த முக்கியமான மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் எங்கள் ஆம்புலன்ஸ்களின் சேவைகளை ஒரு மாதத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம் குறிப்பாக ஏழை நோயாளிகளுக்காக பயன்படும் என்று" ஹஜ்வானி கூறினார். இந்தியாவில் ஏற்பட்ட கொரோனாவில் முதல் அலையின் போது ஆம்புலன்ஸ்கள் ஹஜ்வானி அறக்கட்டளை நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தது. அவர்கள் 24 மணி நேரமும் சேவையில் இருந்தனர்.


சில மாதங்களுக்கு முன்பு கொங்கன் பகுதியில் ஒரு பேரழிவு வெள்ளம் ஏற்பட்டபோது மீட்பு நடவடிக்கைகளிலும் அவர்கள் முன்னணியில் இருந்தனர். "கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கொங்கனில் பஷீர் ஹஜ்வானி தன்னை நிறுத்திக் கொண்டார். அவரும் அவரது குழுவும் எப்போதும் முன்னணியில் இருந்து வழிநடத்தியிருக்கிறார்கள்" என்று கொங்கன் குடியிருப்பாளரும் ஆர்வலரும் கூறினார். "ஹஜ்வானி அறக்கட்டளை ஏழை நோயாளிகளை ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்றடைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் ஒரு பகுதியாக அவர்கள் ஒரு மாதத்திற்கு இலவச சேவையை அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது" என்று பலரும் இவரது சேவையை பாராட்டி வருகிறார்கள். 

Input & Image courtesy: Times of India

Tags:    

Similar News