சண்டிகர்: போதைப் பொருள் கொடுத்து NRI வீட்டில் நுட்பமான முறையில் திருட்டு !
NRI வீட்டில் வேலைப்பார்க்கும் வேலை ஆட்கள் போதைப் பொருட்களைக் கொடுத்து நுட்பமான முறையில் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
சண்டிகரில் உள்ள ஒரு NRI வீட்டில் நுட்பமான முறையில் திருட்டு bஒன்று நடந்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆக இருப்பவர்கள் தங்களது வீட்டிற்கு பெரும்பாலும் வேலை ஆட்களை வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் அவர்கள் நம்ப தகாதவர்களாக இருக்கும் பட்சத்தில் சில வீடுகளில் உள்ள பொருட்களை எடுக்கும் அளவிற்கு செல்கிறார்கள். அந்த வகையில் சண்டிகரில் நேற்றிரவு ஒரு வீட்டில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இரண்டு வேலைக்காரர்கள் போதைப்பொருள் கொடுத்து ஒரு பெண் மற்றும் அவரது 65 வயது NRI மகனின் பணம், தொலை பேசிகள், நகைகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களை கொள்ளையடித்தனர்.
நல்ல பணக்காரர்களாக இருக்கும் அவர்களுடைய வீட்டில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இரண்டு வேலைக்காரர்கள் சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்து உள்ளார்களாம். இவர்கள் தற்பொழுது உரிமையாளர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து ஒரு பெண் மற்றும் அவரது 65 வயது NRI மகனின் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்து உள்ளார்கள். போதைப்பொருள் காரணமாக மயக்கத்தில் இருந்த வீட்டு உரிமையாளர்கள் சுயநினைவு திரும்பிய பொழுது தான் அவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது.
மாலையில் பாதிக்கப்பட்டவர்கள் சுயநினைவு திரும்பியபோது, சந்தேக நபர்களில் ஒருவர் நேபாளத்தைச் சேர்ந்த சோனு தாபா என்று அடையாளம் காணப்பட்டதாகவும், அவர் ஒரு மாதத்திற்கு முன்பு சரிபார்க்கப்படாமல் பணியமர்த்தப்பட்டதாகவும் போலீசார் இடம் தெரிவித்தனர். மற்ற சந்தேக நபர் ஒரு வாரத்திற்கு முன்பு தாபாவின் வேண்டுகோளின் பேரில் பணியமர்த்தப் பட்டார். மேலும் NRIயான சுரிந்தர் பால் சிங் மற்றும் அவரது தாயார் சர்விஜித் கவுர் ஆகியோர் வியாழக்கிழமை மாலை பெஹோவாவில் உள்ள தங்கள் வீட்டில் இருந்து திரும்பி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மறுநாள் காலையில், சந்தேகமடைந்தவர்களால் அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர்கள் மயங்கி விழுந்தனர். பின்னதான் அவர்களுக்கு வீட்டில் பொருட்கள் திருட்டு போன விஷயம் தெரிய வந்துள்ளது என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
Input & Image courtesy:Tribuneindia