கொரோனா குறித்த தவறான கருத்துக்களுக்கு எதிராக போராடி வரும் NRI மருத்துவர் !
கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான நீதாஹுசைன் என்பவர் தற்பொழுது கொரோனா குறித்த தவறான கருத்துக்களுக்கு எதிராக போராடி வருகிறார்.
டாக்டர் பட்டம்பெற்ற கேரளாவைச் சேர்ந்த மாணவி நீதாஹுசைன் தற்பொழுது ஸ்வீடன் நாட்டில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்பொழுது கொரோனா தொற்றுகள் குறித்து மக்கள் இடையே பரப்பப்படும் தவறான கருத்துகளுக்கு எதிராக போராடி வருகிறார். குறிப்பாக இவர் மருத்துவ நரம்பியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர். இவருடைய கல்லூரி காலங்களின் போது இவருக்கு மீடியாவில் கட்டுரை எழுதுவது தொடர்பான வேலையில் ஈடுபட்டு உள்ளார்.
அனைத்து மக்களும் பெரும்பாலான தங்களுடைய கேள்விகளை விக்கிப்பீடியாவின் கேட்கிறார்கள் ஆனால் விக்கிப்பீடியாவின் அப்டேட்கள் சரியான வகையில் இருக்கிறதா?என்பது தான் இங்கு முக்கியம். அதே வகையில் இவர் தன்னுடைய மருத்துவ துறை சம்பந்தப்பட்ட பாடங்களை விக்கிபீடியாவில் தேடும் பொழுது, அது இவர் படிக்கும் காலத்தில் இருந்த பாடங்களை காட்டியது. ஆனால் தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படவில்லை என்பதை உணர்ந்துள்ளார். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட விக்கிபீடியா, ஆன்லைன் கலைக்களஞ்சியத்தில் தொற்றுநோயின் மருத்துவ அம்சங்கள் மற்றும் சமூக-பொருளாதார தாக்கம் தொடர்பான பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் இவரது முயற்சிகளை அங்கீகரித்து உள்ளது. 'கோவிட் -19 க்கு எதிராக நிரூபிக்கப்படாத முறைகளின் பட்டியல் மற்றும் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல் போன்ற பக்கங்களை உருவாக்கி, தவறான தகவலை எதிர்ப்பதற்காகவும் அவர் குறிப்பாக வேலை செய்தார். குறிப்பாக இவருடைய முயற்சியின் பேரில் விக்கிப்பீடியாவில் புதிய அப்டேட்கள் தொற்றுநோய் சம்மந்தப்பட்ட விஷயங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
Image courtesy:Times of India