NRI டெபாசிட்டுகள் இந்த ஆண்டு குறைந்துள்ளது: RBI விளக்கம்!
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் டெபாசிட்டுகள் இந்தியாவில் இந்த ஆண்டு குறைந்துள்ளது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாங்கள் பெருமளவில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் தங்களுடைய குடும்பத்திற்காக பங்குகளில் முதலீடு செய்யும் டெபாசிட்டுகள் இந்த ஆண்டு குறைந்துள்ளது. குறிப்பாக 2021 2.6% பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது. எனவே இது முன்பு காலகட்டத்தில் 6.7% பில்லியன் டாலராக இருந்ததும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு பெருமளவில் டெபாசிட் சரிவடைந்து வருவதற்கு என்ன காரணம் என்பதையும் ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக பெடரல் வங்கியின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், " வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தனக்கென குடியுரிமை அல்லாத இந்தியர்கள்(NRO) என்ற கணக்கில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் டெபாசிட் செய்யும் பணம் தற்பொழுது குறைந்து வருவதற்கான முக்கிய காரணம் நோய்தொற்று தாக்கம் என்றும் கூறப்படுகிறது. டெபாசிட் களைக் காட்டிலும் அவர்கள் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் பங்குச் சந்தைகளில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறார்கள்" என்று அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
வங்கியில் முதலீடு செய்யும் டெபாசிட் சதவிகிதத்தை விட அவர்கள், பங்குச்சந்தையின் மூலம் கிடைக்கும் இலாபம் அவர்களுக்கு மிகப் பெரியதாக இருக்கும். எனவே வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடைய பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெரும்பாலான திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். மேலும் வேலையின்றி தவிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் காரணமாக கூட அவர்கள் தங்களுடைய வங்கி டெபாசிட்டை குறைப்பதற்கு அதற்கு காரணமாக இருக்கலாம் என்று பல்வேறு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
Input & Image courtesy: Economic times