இந்தியாவில் சொத்துகளை வாங்க RBI அனுமதி NRIகளுக்கு தேவையா?

இந்திய சொத்துக்களை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்(NRI) வாங்கும்பொழுது ரிசர்வ் வங்கி அனுமதி பெற வேண்டுமா?

Update: 2022-01-19 13:44 GMT

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இந்தியாவில் உள்ள கட்டுகளை வாங்கவும் விற்கவும் முழு உரிமை உண்டு ஆனால் இந்தியாவில் இருந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்கும் பொழுது அவர்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெற வேண்டுமா என்ற ஒரு கேள்வி எழுகிறதா? சில குறிப்பிட்ட வகையான நிலங்களை தவிர பிற வகையான சொத்துக்களை அவர்கள் வாங்கும் பொழுது RBI-யின் அனுமதியை அவர்கள் பெற வேண்டிய அவசியம் கிடையாது.  


ஆனால் அவர்கள் இந்தியாவில் பண்ணை வீடு, விவசாய நிலம் மற்றும் தோட்ட அடங்கிய சொத்துக்களை அவர்கள் வாங்கும் பொழுது நிச்சயம் அவர்கள் RBI சார்பில் அனுமதி பெற வேண்டும். அன்னிய செலவாணி ஒழுங்குமுறைச் சட்டத்தை நீக்கி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களை எந்த முறையில் கையாள வேண்டும் என்று கேள்வி எழுகையில், இந்த ஒரு கேள்விக்கு RBI தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே முன்பு இருந்த FEMA சட்டம் பிரிவு 42 தற்பொழுது செல்லுபடி ஆகாது என்பதையும் கோட் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  


எனவே தற்போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் FEMA சட்டம் 1999 கீழ் கண்காணிக்க படுகிறார்கள். எனவே அந்த சட்டம் தற்போது அவர்களுக்கு இந்த சலுகையை வழங்கியுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடைய முதலீடுகளை இந்தியாவில் தாராளமாக முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஒரு முடிவு அமைந்துள்ளது. எனவே பல்வேறு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடைய சொந்த நாட்டில் சொத்துக்களை வாங்க தற்பொழுது தாராளம் காட்டி வருகிறார்கள்.  

Input & Image courtesy: Economic times

Tags:    

Similar News