குழந்தையுடன் தப்பியோடிய மனைவி: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த NRI கணவர்!

தனது மனைவி குழந்தையுடன் தனக்கு தெரியாமல் தப்பி சென்றதாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் NRI கணவர்.

Update: 2022-01-07 13:21 GMT

அமெரிக்காவில் பாதுகாப்பு சேவையில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப நிபுணரான மனுதாரர் NRI தமிழர் கணவர், 2008-ல் அமெரிக்காவில் தன்னுடன் வேலை பார்க்கும் குஜராத்தி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2016ல் ஒரு மகள் பிறந்தார். திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய மனைவியின் நடத்தை மற்றும் மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக NRI கணவர், தனது மகளின் பாதுகாப்பு உரிமை தனக்கு வழங்குமாறு அமெரிக்காவிலுள்ள நீதிமன்றத்தில் உரிமை பெற்றுள்ளார். மேலும் அங்குள்ள நீதிமன்றம் இவருக்கு அந்த பாதுகாப்பு உரிமையை வழங்கியுள்ளது. 


பிறகு சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்ற காரணத்தினால் இருவரும் தனது மகளுடன் அமெரிக்காவில் இருந்து குஜராத்திற்கு வந்துள்ளார்கள். வந்த இடத்தில் இவருக்கு தெரியாமல் மனைவி தனது மகளுடன் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆதாரங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் அங்கு உள்ள போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கு ஒன்றும் பதிவு செய்துள்ளார். மேலும் இவருக்கு ஹிந்தி தெரியாது என்ற காரணத்தினால் அவர்கள் இவருடைய வழக்கை எடுக்க மறுத்துள்ளார்கள். 


அதன்பிறகு இவர் குஜராத் ஐகோர்ட்டில் தன்னுடைய வழக்கை தாக்கல் செய்துள்ளார். பின்னர் அவர் உயர்நீதிமன்றத்தை அணுகி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். தனக்கு இந்தி அல்லது குஜராத்தி தெரியாது என்பதால் நிர்வாகம் தனது புகாரை கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். தனது பாஸ்போர்ட் மற்றும் பிற பயண ஆவணங்களையும் மனைவி எடுத்துச் சென்றதாக அவர் குற்றம் சாட்டினார். அந்தப் பெண்ணின் இருப்பிடம் குறித்து நீதிமன்றத்தின் வினவலுக்கு, அவர் அகமதாபாத்தில் வசிப்பதாக வழக்கறிஞர் கூறினார். மேலும் இதுகுறித்து நீதிபதி பெஞ்ச், சோனியா கோகானி மற்றும் நீதி மௌனா பட் குழுவில், குழந்தை நலன் கருதி நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றார். பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் அரசு அந்தப் பெண்ணின் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

Input & Image courtesy: Times of India

 



Tags:    

Similar News