இந்தியாவின் நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில் NRI தொழிலதிபர்.!
NRI தொழிலதிபரான லார்ட் ஸ்வராஜ் பால் இந்தியாவின் நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில் களம் இறங்கி உள்ளார்.
NRI தொழிலதிபரான மற்றும் தற்பொழுது லண்டனை தளமாகக் கொண்ட முன்னணி தொழிலதிபர் லார்ட் ஸ்வ்ராஜ் பால் அவர்கள் நோய் தொற்றுக்கு பிறகு இந்தியாவின் மீது அவருடைய பார்வையை செலுத்தியுள்ளார். குறிப்பாக இந்திய நிறுவனங்களை கைப்பற்றும் முயற்சியில் அவர் களமிறங்கியுள்ளார். UK மற்றும் இந்தியாவில் வரும் மாதங்களில் கையகப்படுத்தும் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். கபாரோ குழுமத்தின் 90 வயதான தொழில் அதிபரான இவர் தற்போது இந்த வாரம் தனது குழு சில சாத்தியமான கையகப்படுத்தல்களை அடையாளம் கண்டுள்ளது என்று கூறினார்.
அதாவது தற்போது உள்ள நோய் தோற்று நிலைமை மாறிய பிறகு பல்வேறு நாடுகளில் அதிலும் குறிப்பாக இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியிலும் இவருடைய நிறுவனம் களமிறங்கும் உள்ளது. ஏஃகு தயாரிப்புகள் துறையில் உள்ள வணிகங்கள் பரிசீலனையில் இருப்பதால், உற்பத்தித் துறையில் நிறுவனத்தின் பலம் குறித்து கவனம் செலுத்தப்படும். இதுபற்றி அவர் கூறுகையில் "இந்தியாவில் நாங்கள் ஏற்கனவே 20 மாநிலங்களில் முன்னிலையில் உள்ளோம். எனவே புதிய கையகப்படுத்தல் எஃகு நிறுவனங்களை மீட்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளோம் என்று" பால் கூறினார்.
இங்கிலாந்தில், தொழில்துறை பொருட்களின் உற்பத்தி தொடர்பான புதிய வணிகங்களில் எங்களின் நிபுணத்துவம் கார்கள், விமானங்கள், இரயில்வேக்கான எஃகு தயாரிப்புகள் போன்றவை எனவே அவற்றை சரியாக செய்வதே எனது குறிக்கோள் என்றும் அவர் மேலும் கூறினார். இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பணக்காரர்களின் பட்டியலில் உள்ள பணக்காரர்களில் ஒருவரான பால், GBP 2 பில்லியனைக் கொண்டு 1968 இல் இங்கிலாந்தின் ஹண்டிங்டனில் தனது முதல் வணிகத்தைத் தொடங்கினார். அவரது நிறுவனத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் இப்போது அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளன.
Input & Image courtesy:Business Standard