வெளிநாட்டு இந்தியர்களின் பயண விதிகளை மாற்றி அமைத்த மத்திய அரசு !

தற்பொழுது இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் விதிமுறைகளை மாற்றி அமைத்தது மத்திய அரசு.

Update: 2021-10-28 13:33 GMT

குறிப்பாக சமீபத்தில் இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் கட்டுப்பாடுகளை பெருமளவில் தளர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் பயணிகள் இனி தனிமைப்படுத்துதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளது. சர்வதேச பயணிகள் தொடர்பான சமீபத்திய ஆணையை இந்திய அரசாங்கம் உடனடியாக வெளியிட்டது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து பயணிகளும் சில தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளின் இருந்து தளர்வுகள் செய்யப்படுகிறார்கள். இந்தியாவிற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சர்வதேச பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். இன்று முதல் வீட்டு தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.  


இந்திய அரசாங்கத்தால் பகிரப்பட்ட பயணம் தொடர்பான அறிவிப்பில் சமீபத்தில் இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஒப்புக்கொண்ட நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்களுக்கு இந்த முடிவு குறிப்பாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி இந்திய அரசாங்க அதிகாரிகள் கூறுகையில், "உலகெங்கிலும் அதிகரித்து வரும் தடுப்பூசி கவரேஜ் மற்றும் தொற்றுநோயின் மாறிவரும் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் சர்வதேச வருகைக்கான தற்போதைய வழிகாட்டுதல்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன". இருப்பினும், இந்தியாவிற்குள் வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் எதிர்மறையான RT-PCR சோதனை கட்டாயமாகும். 


அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் உள்வாங்குவதற்கு முன், கோவிட் பரிசோதனை அறிக்கைகளை சரிபார்க்கவும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், ​​லெபனான், ஆர்மீனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் பயணிகள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார்கள். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான சில புதிய பயண வழிகாட்டுதல்கள். இவை அனைத்து பயணிகளும் தங்கள் மொபைல் போன்களில் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Input & Image courtesy:Economic times

 


Tags:    

Similar News