பதினாறு ஆண்டுகால கிராமத்தின் விழாவை கொண்டாடும் NRIகள்!

பதினாறு ஆண்டுகள் நிறைவு ஒட்டி விழாவை எடுத்துக் கொண்டாடும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.

Update: 2022-01-03 12:43 GMT

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மஜ் நகரம் தன்னுடைய பதினாறு ஆண்டுகால நிறைவு விழாவை அடைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்த சென்று வெளிநாடுகளில் வேலை பார்க்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் எங்களுடைய கிராமத்தில் நினைவு விழாவை ஒவ்வொரு ஆண்டும் விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். நோய் தொற்று காரணமாக, அதே மாதிரி கடந்த இரண்டு வருடங்களாக இந்த விழா நடைபெறவில்லை. அதே மாதிரி இந்த வருடம் ஜனவரி 12-ஆம் தேதி தர்மஜ் தினத்தை சிறப்பாக கொண்டாட இங்குள்ள NRIகள் முடிவு எடுத்து உள்ளார்கள்.  


கடந்த ஆண்டு, கோவிட் தொற்றுநோய் காரணமாக, 15வது ஆண்டு தர்மஜ் தினம் கிட்டத்தட்ட நடத்த முடியாமல் போனது. ஆனாலும் இந்த வருடம், நிகழ்வை நேரடியாக நாங்கள் ஏற்பாடு செய்வோம். அதே நேரத்தில் இங்கு விழாவில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு நேரலை ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று தரோஹர் அறக்கட்டளையின் நிறுவனர் ராஜேஷ் படேல் கூறினார். NRIகள் தர்மஜ், சாகம் பதிதார் சமாஜுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறார். 


கடந்த ஆண்டு, யூடியூப் சேனல் மற்றும் பேஸ்புக் பக்கம் மூலம் 25,000 நபர்கள் மெய்நிகர் முறையில் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு, NRIக்கள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து, திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வர ஆரம்பித்துள்ளனர். ஆஃப்லைன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு, முழு நிகழ்வையும் நேரலையில் ஒளிபரப்புவோம் என்று கிராம நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் கிராமத்திற்கு ஆக சிறப்பாக செயலாற்றி அவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட உள்ளன. 

Input & Image courtesy: Times of India



Tags:    

Similar News