சமூக வலைதளங்களில் தவறான கருத்தை பதிவிடும் NRIகள்: இனி விசா மறுக்கப்படும்!
சமூக வலைத்தளங்களில் தவறான வெறுக்கத்தக்க பதிவுகளை பதிவிடும் NRIகளுக்கு விசா மறுக்கப்படும்.
இந்தியாவில் தற்போது சமூக வலைதளங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட வண்ணம் உள்ளது. இதில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் இங்கு நடக்கும் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களை பதிவிடும் பொழுது, அது எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனைத் தடுப்பதற்காக தற்போது, ஹைதராபாத் காவல் அதிகாரிகள் சில நடவடிக்கைகளை கையாண்டுள்ளார்கள்.
இது தொடர்பாக நகர காவல் ஆணையராக சி.வி.ஆனந்த், கோத்வாலாக பொறுப்பேற்ற பின், துறை அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். துறை ஊழியர்களுடனான தனது முதல் சந்திப்பில் சைபர் கிரைம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிவித்தார். உயர் போலீஸ் அதிகாரி குறிப்பிடுகையில், "சமூக வலைதளங்களில் பல NRIகள் சமூக வலைதளங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இனிமேல், சமூக ஊடகங்களில் வெறுப்பூட்டும் கருத்துகள் அல்லது இடுகைகளை வெளியிடுவதன் மூலம் எந்தவொரு NRIயும் நாட்டின் சட்டத்தை மீறுவது கண்டறியப்பட்டால், அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் இதுபோன்ற தொடர்ந்து ஒரே மாதிரியான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராகச் செயல்படவும், குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினார். "குற்றங்களில் ஈடுபடும் பிறரை தடுக்க இது உதவும். வழக்குகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், சட்ட ஆலோசகர் உடனடியாக ஆலோசனைகளை வழங்கி வழக்குகளை விரைந்து தீர்க்க வேண்டும். விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News