வெள்ளை மாளிகையின் புதிய அறிக்கை ! மகிழ்ச்சியில் அமெரிக்க NRIகள்!
புதிய சர்வதேச பயண முறைகளில் கீழ் நவம்பர் மாதம் முதல் NRIகள் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட உள்ளார்கள்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிறைய பேர் தற்பொழுது இந்தியாவில் தான் வசித்து வருகிறார்கள். காரணம் அங்கு, அதிகரித்துவரும் தொற்றின் காரணமாக இந்தியாவில் இருந்து வேலை செய்கிறார்கள். ஆனால் தற்பொழுது வெள்ளை மாளிகை NRIக்கு ஒரு மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு புதிய சர்வதேச பயண முறைகளில் கீழ் நவம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களை அமெரிக்கா அனுமதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அடிப்படையில் அமெரிக்கா முன்பு அமல்படுத்திய இந்தியா போன்ற நாடுகளின் பயணத் தடையை நீக்குகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க வரும் நபர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்துடன் அமெரிக்கா செல்லலாம் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பு வரை, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்குள் நுழைய வெளிநாட்டுப் பயணிகளுக்கு தடை விதித்தார். இன்று தற்பொழுது புதிய அரசாங்கம் ஒரு புதிய சர்வதேச விமான பயண முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய அமைப்பானது அமெரிக்காவிற்கு வரும் பயணிகளிடமிருந்து COVID-19 பரவுவதைத் தடுக்க கடுமையான நெறிமுறைகளை உள்ளடக்கியது. அமெரிக்கர்களைப் பாதுகாப்பது மற்றும் சர்வதேச விமானப் பயணத்தை பாதுகாப்பானதாக்குவது என்றும் வெள்ளை மாளிகையின் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியண்ட்ஸ் ஒரு மெய்நிகர் செய்தி மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்கா தற்பொழுது அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்தை அதன் வழிகாட்டியாக கொண்டு, ஒரு புதிய சர்வதேச விமான பயண அமைப்பை உருவாக்கியுள்ளது. இவை இரண்டும் இங்குள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை உள்நாட்டில் அதிகரிக்கிறது மற்றும் சர்வதேச விமான பயணத்தின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. மிக முக்கியமாக, நவம்பர் மாதத்தில் இருந்து அமெரிக்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும். மேலும் அவர்கள் அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன் தடுப்பூசி சான்றை காட்ட வேண்டும்" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy:Economic times