NRI ஓய்வூதியதாரர்களுக்கு சுலபமான வழியை ஏற்படுத்திக் கொடுத்த மத்திய அரசு !

ஓய்வூதியம் பெறும் NRIகளுக்கு மிகவும் சுலபமான வழிகளை மத்திய அரசாங்கம் தற்போது ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

Update: 2021-10-20 13:27 GMT

 இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவிற்குள் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு நேரடியாக அவர்களுடைய பணம் அவர்கள் வீட்டு வாசலுக்கு சென்று விடுகிறது. ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களுக்கும் இது போன்ற வசதியை செய்து தர மத்திய அரசாங்கம் தற்போது புதிய வழியை கையாண்டு வருகிறது. இதன் மூலம் NRIகள் ஓய்வூதியம் பெறுபவர்கள் இப்போது சிரமமின்றி வாழ்க்கைச் சூழலை வாழலாம். அரசாங்க ஓய்வூதியதாரர்கள் இப்போது வங்கிகளுக்கு நேரடியாக சென்று தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கும் தொந்தரவைக் குறைக்க முடியும் என்பதற்காக அக்டோபர் 1 முதல், ஓய்வூதியதாரர்கள் தங்கள் வருடாந்திர வாழ்க்கைச் சான்றிதழ்கள் அல்லது ஜீவன் பிரமான் பத்ராவை சமர்ப்பிக்கத் தொடங்க வேண்டும். இதனால் அவர்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியும். 


குறிப்பாக 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை தங்கள் வருடாந்திர வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதைச் செய்ய, ஓய்வூதியதாரர்கள் வங்கியை நேரடியாக பார்வையிடலாம். ஆனால் தற்பொழுது இந்த வாழ்க்கைச் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களும் இதை எளிதாக சமர்ப்பிக்கலாம். ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியர் நலத்துறை (DoPPW) வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையின்படி, இந்தியாவுக்கு வெளியே வாழும் ஒரு ஓய்வூதியதாரரும் ஜீவன் பிரமன் பத்திரத்தை சமர்ப்பிக்க சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.


ஜீவன் பிரமான் பத்ரா மூலம் வெளிநாட்டில் வாழும் ஓய்வூதியதாரர்களுக்கான வழிகாட்டுதல்கள், NRI ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தனிப்பட்ட முறையில் இந்தியாவிற்கு வர முடியாவிட்டால், ஓய்வூதியம் பெறுபவர் வாழும் இந்திய தூதரகம், இந்திய உயர் ஆணையம் அல்லது இந்திய துணை தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி வழங்கிய சான்றிதழின் அடிப்படையில் ஓய்வூதியத்தை அனுமதிக்கலாம். சான்றிதழ் PPO இல் ஒட்டப்பட்ட புகைப்படங்கள் அல்லது பாஸ்போர்ட்டின் படம் அல்லது அத்தகைய ஆவணத்தின் அடிப்படையில் வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுபவர் இந்திய தூதரகம், துணைத் தூதரகத்திற்குச் செல்ல முடியாவிட்டால், அவர்கள் தேவையான ஆவணங்களை தபால் மூலம் துணைத் தூதரகத்தில் சமர்ப்பிக்கலாம். இந்தியாவில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தபால் அலுவலகம் மூலம் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 

Input & Image courtesy:Dnaindia


 


Tags:    

Similar News