கொரோனா காரணமாக NRIகளுக்கு வரி செலுத்துவதில் கொடுக்கப்படும் சலுகைகள் !

தொற்று காரணமாக இந்த ஆண்டும் NRIகளுக்கு வரி செலுத்துவதில் சில சலுகைகளை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

Update: 2021-10-22 14:02 GMT

நோய் தொற்று காரணமாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து சில சலுகைகளை மத்திய அரசாங்கம் தற்போது வழங்கியுள்ளது. குறிப்பாக அவர்கள் இரட்டை வரி கட்டுவதில் இருந்து நிவாரணம் அளிக்கும் பொருட்டு இந்த நிதி ஆண்டிற்கான(2020-2021) வரி செலுத்துவதில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் குடியிருக்கும் அனைவரும் பணம் சம்பாதிக்கும் வருமானத்திற்கு அரசாங்கத்திடம் வரி செலுத்த வேண்டும். அவர்களுடைய வருமானம் ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் இருந்தால், கட்டாயம் அவர்கள் வரி செலுத்த வேண்டும். ஆனால் அதில் சில விதிமுறைகளை வருமானவரித்துறை வைத்துள்ளது. 


அதாவது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் 182 நாட்களுக்கும் மேல் இருந்தால் அவர்களும் இந்திய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் அதற்கு கீழ் இருந்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியது இல்லை. ஆனால் தற்போது உள்ள நோய் தொற்று காரணமாக அவர்கள் இந்த ஆண்டு முழுவதும் இங்கேயே தங்க வேண்டிய ஒரு சூழ்நிலை எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்த நிதியாண்டு NRIகளுக்கு மட்டும் 182 நாட்களில் இருந்து 120 நாட்களாக குறைத்து கணக்கிடப்பட்டு அவர்கள் தங்களுடைய வருமானத்திற்கு வரி செலுத்துகிறார்கள். இது கடந்த நிதியாண்டு 2019-20 வரை, இந்த NRIகள்/PIOக்கள் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 182 நாட்கள் செலவழித்தால்தான் இந்தியாவிற்கு வருகை தருவார்கள். 


அதேசமயம் வேறு எந்த வெளிநாட்டினரும் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 60 நாட்களும் முந்தைய நான்கு ஆண்டுகளில் 365 நாட்களும் செலவழித்திருந்தாலும் வரி குடியிருப்பாளராக மாறியிருப்பார்கள். மேலும் இந்த வருட பட்ஜெட்டின் படி, ஒரு NRI ஆக இருப்பவர்கள் 120 நாட்கள் இந்தியாவில் இருந்திருந்தால் அவர்கள் இந்த நாட்டின் குடிமகன்களாக கடத்தப்பட்டு, அவர்கள் வரி செலுத்த வேண்டும். மேலும் அவர்களுடைய இந்திய வருமானம் 15 இலட்சத்திற்கு மேல் இருந்தால், அவர்களுக்கும் இதே விதி பொருந்தும் மேலும் அவர்கள் இந்திய குடிமகன்களாக அறியப்பட்ட இந்தியாவிற்கு தான் பயன்படுத்த வேண்டும் வேறு எந்த நாட்டிற்கும் வரி செலுத்தத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

Input & Image courtesy:Economic times



Tags:    

Similar News