NRI டாக்டர்கள் உதவியின் மூலம் இந்திய கிராமங்களை தத்தெடுக்கும் அமைப்பு !

அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திய மருத்துவர்கள் AAPI என்ற அமைப்பின் மூலமாக இந்திய கிராமங்களை தத்தெடுக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள்.

Update: 2021-09-04 13:56 GMT

இந்தியாவிற்கு உதவும் முயற்சியாக, அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் ஃபிசிஷியன்ஸ் ஆஃப் இந்தியன் ஒரிஜினின் (AAPI) உறுப்பினர்கள், அமெரிக்காவில் ஒரு முதன்மையான மருத்துவ அமைப்பான "கிராமங்கள் தத்தெடுப்பு" என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்கினர். மேலும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள NRI மருத்துவர்களான டாக்டர். சதீஷ் கத்துலா தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர். அனுபமா கோதிமுகுலா, டாக்டர். ஜெகன் ஐலினானி மற்றும் டாக்டர். ராம் சிங் ஆகியோர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.  


மேலும் இந்த AAPI-க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிகாகோ, நியூயார்க், ஹூஸ்டன், அட்லாண்டாவின் இந்திய தூதரக ஜெனரல்கள் மற்றும் சான் பிரான்சிஸ்கோவின் துணை தூதரக ஜெனரல் ஆகியோர் இந்த முயற்சியின் துவக்கத்தின் போது நேரடியாக பங்கேற்றனர். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, ஒரு செய்தியுடன் கூட்டத்தில் கலந்து கொண்டார் மற்றும் இந்தியாவுக்காக, குறிப்பாக தொற்றுநோய்களின் போது இந்தியாவுக்கான AAPI அமைப்பின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.


மேலும் இது தொடர்பாக, AAPI தலைவர் டாக்டர் அனுபமா கோதிமுகுலா அவர்கள் தத்தெடுப்பு கிராமம் என்ற திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். இதில் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. அங்கு AAPI குளோபல் டெலிகிளினிக்ஸ், இன்க் உடன் இணைந்து 75 ஆண்டுகால இந்தியாவின் சுதந்திரத்தை முன்னிட்டு 75 கிராமங்களை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார். ஆந்திரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், இரத்த சோகை, அதிக கொழுப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, சிறுநீரக நோய், உடல் பருமன் மற்றும் ஹைபோக்ஸீமியா ஆகியவற்றுக்கான இலவச சுகாதார பரிசோதனைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்று டாக்டர், கோதிமுகுலா கூறினார். 

Input:https://m.timesofindia.com/nri/us-canada-news/indian-american-doctors-launch-adopt-a-village-scheme-in-india/amp_articleshow/85894016.cms

Image courtesy:times of India



Tags:    

Similar News