ஒமைக்ரான் அதிகரிப்பு: சர்வதேச பயணிகளுக்கு ஏற்பட இருக்கும் சிக்கல்.!

ஒமைக்ரான் அதிகரிப்பு காரணமாக சர்வதேச விமான பயணிகளுக்கு தற்பொழுது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-12-28 13:13 GMT

தற்பொழுது கொரோனா வைரஸின் உருமாற்றம் ஆக அறியப்படும் ஒமைக்ரான் இந்தியாவிலும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச விமான பயணிகளுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளையும் மற்றும் பிற நாடுகளுக்கும் எல்லைகளில் பலத்த கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு நாடுகள் தன்னுடை எல்லையை மூடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது சிங்கப்பூர் அரசாங்கம் இந்திய பயணிகளுக்கு தடையை விதித்துள்ளது.  


மேலும் இதன் காரணமாக கோவை மற்றும் சிங்கப்பூர் விமான சேவையை மீண்டும் துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில், சிங்கப்பூர் இலங்கை போன்ற நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்த நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக பல்வேறு சர்வதேச விமான சேவைகளை பாதிக்கப்பட்டு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் இது குறித்த சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரி கூறுகையில்,  "மீண்டும் கோவை சிங்கப்பூரில் நானே விமான சேவைகளை துவங்குவதில் தற்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை இருந்தாலும் ஆன்லைன் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக வட்டாரங்கள் தரப்பில் கூறுவதாக" அவர் கூறியுள்ளார். மேலும் இது பற்றி மேலும் தகவல்களுக்கு அந்த நிறுவனத்தின் வெப்சைட் துக்கத்திலும் தாங்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் பயணிகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். 

Input & Image courtesy: Dinamalar



Tags:    

Similar News