'எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே பணம் வழங்குகிறது' - இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நெகிழ்ச்சி

'எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே பணம் வழங்குகிறது' என இலங்கை பிரதமர் நன்றியுடன் தெரிவித்துள்ளார்;

Update: 2022-06-09 05:50 GMT

'எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே பணம் வழங்குகிறது' என இலங்கை பிரதமர் நன்றியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது, இதனால் அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பிரதமரும் மாற்றப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி, போராட்டங்கள் காரணமாக எரிபொருள், அத்தியாவசியப் பொருள் என அனைத்து விலையும் பலமடங்கு அதிகரித்தது. இந்த பிரச்சினையில் இலங்கை மீண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி வழங்கவில்லை. இந்த நிலையில் 'இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு எரிபொருள் வாங்க பண உதவி வழங்கவில்லை' என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு இந்தியா எரிபொருள், மருத்துவ பொருள் பணம் என 25 ஆயிரம் கோடி ரூபாய் (கிட்டத்தட்ட 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிற்கு இது வரை கடன் உதவி செய்துள்ளது.


இலங்கையில் அரசு மின் விநியோக அமைப்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது, 'பதாகைகளை நீங்கள் பிடித்த போராட்டம் நடத்தலாம் ஆனால் தடை ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் எந்தவித உதவி கேளுங்கள் என என்னிடம் கேட்காதீர்கள். நமக்கு எரிபொருள், நிலக்கரி வாங்க எந்த நாடு பணம் கொடுக்கவில்லை. இந்தியா மட்டுமே நமக்கு எரிபொருள் நிலக்கரி வாங்க பணம் கொடுக்கிறது. இந்தியாவிடமிருந்து நாம் வாங்கும் கடன் நீ எல்லையை நெருங்கி விட்டது அதனை நீடிப்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என்றார். 


Source - Daily Thanthi

Similar News