மலேசியா: இயற்கை விவசாயத்தில் விருது பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர் !
இயற்கை விவசாயத்தில் விருது பெற்ற மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர்.
மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நவநீத்பிள்ளை இவர் கணினித்துறையில் வல்லுனர். மேலும் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வந்தாலும் இயற்கையை நேசித்து ஆர்வம் கொண்டு விவசாயத்தில் ஈடுபட முடிவுசெய்தார். மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் ஆரோக்கியமான உணவு வகைகளான காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் நாட்டம் கொண்டு, நடுத்தர குடும்பங்கள் முதல் மேல்தட்டு குடும்பங்கள் வரை விரும்பி வாங்கும் அன்னாசி பழங்கள் பயிரிட்டு வருகிறார். இவர் அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற வகையில் பல விதமான விலைகளில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
குறுகிய காலத்தில் அன்னாசி பழ விவசாயத்தில் துவங்கி தொடர்ந்து வெற்றி கண்டு விவசாயத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தென்னை, மக்காச்சோளம் மற்றும் மிளகாய் விவசாயம் செய்து வருகிறார். இவையனைத்தும் மதிப்பு கூட்டுப்பொருள்களாக மாற்றி மலேசியாவில் உள்ள வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். பல்வேறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்து வருகிறார். எனவே இதன் காரணமாக தற்போது மலேசியா வாழ் இந்தியரான இவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்திய வம்சாவளி இளைஞர் நவநீத்பிள்ளைக்கு மலேசிய மத்திய மற்றும் மாநில அரசு விருதுகள் 7 வழங்கி கௌரவித்துள்ளது. இதைப்பற்றி அவர் கூறுகையில், "தனக்கு பிடித்த விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதால் மனநிறைவு கிடைப்பதாகவும் வாழ்க்கை முறை தலைகீழாக மாறியுள்ளதாகவும், படித்த இளைஞர்கள் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.
Input &image courtesy:Dinamalar