பாகிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளம் - இந்தியாவிடம் இருந்து காய்கறி இறக்குமதி செய்யும் பாக்
பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெல்லும் காரணமாக இந்தியாவிடம் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய முடிவு.
பாகிஸ்தானில் தற்போது கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் இருக்கும் பல்வேறு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள். மக்களை பாதுகாக்கும் பொருட்டு அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் உணவிற்காக கடும் தட்டுப்பாடு அங்கு நிலவுகிறது. இதன் காரணமாக இந்தியாவின் உதவியை தற்போது பாகிஸ்தான் அரசாங்கம் நாடி இருக்கிறது. இந்தியாவிடம் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சர் இந்த ஒரு யோசனை ஆகத்தான் அரசுக்கு கூறியிருக்கிறாராம்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்தின் காரணமாக பலுசிஸ்தான், சிந்து மற்றும் தெற்கு பஞ்சாப் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து மற்றும் பழங்களின் விலை உயர்வு கடுமையான வகையில் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஸ்மாயில் அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறுகையில், "வெள்ளத்தினால் பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துவிட்டன. இந்நிலையில் மக்களை காப்பாற்றுவதற்கு இந்தியாவில் இருந்து காய்கறிகளை வாங்குவதற்கு முடிவு விரைவில் பரிசீலிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவுடன் ஆன வர்த்தகம் என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் கூறி இருக்கும் தகவல் பல்வேறு அமைச்சர்களின் கேள்விக்கு உள்ளாக்கும் ஒரு செய்தியாகவே அமைந்துள்ளது. இதன் காரணமாக நிதியமைச்சர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வார். ஆனால் அதற்கு அவர் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். "பொருளாதாரத்தை சரி செய்வதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். அதனால் நான் வேலையில் இருந்து போக மாட்டேன் என்று நம்புவதாகும்" அவர் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News