சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க பிரதமர் மோடியின் சூப்பர் திட்டம் என்ன?

சீனாவின் ஆதிக்கத்தை மூடியிருக்கும் வகையில் நேபாளத்திற்கு பிரதமர் மோடி அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Update: 2022-05-18 01:33 GMT

நேபாள நாட்டில் உள்ள லும்பினிவில் புத்த மதம் மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான கட்டுமானத்தை அடிக்கல் நாட்டுவதற்கு பிரதமர் மோடி அவர்கள் நேபாள நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேபாள பிரதமர் அவர்களின் தரப்பில் இருநாட்டு பிரதிகள் அவர்கள் தலைமையில் இருநாட்டு இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. புத்தர் பிறந்த தினமான இன்று புத்த பூர்ணிமா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புத்தரின் பிறந்த இடமாக கருதப்படும் நேபாளத்தில் உள்ள லும்பினிவில் பார்வையிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனி விமானத்தில் பயணம் ஆகி உள்ளார். 


மேலும் நேபாளத்தின் பிரதமர் தூபா அவர்கள் நேரடியாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கு உள்ள மகா மாயாதேவி கோவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார். மேலும் புத்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிலைக்கு மரியாதை செய்தார். இரு நாட்டு பிரதமர்களும் சிறப்பு நிகழ்ச்சி கலந்துகொண்டு நடத்தினார்கள். 


காதமாண்டு பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் இணைந்து கல்வி கலாச்சாரம் உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. மேலும் சீனாவில் சார்பில் நேபாளத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஒரு நிகழ்வாக இந்தியா நேபாளம் உறவுகளை பலப்படுத்தும் வகையில் நேபாளத்திற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: Polimer news

Tags:    

Similar News