நாட்டை விட்டு வெளியேறும் NRIகள்: வேறு நாடுகளில் குடியுரிமை பெறுவது நல்லதா?

நாட்டை விட்டு வெளியேறும் NRIகள் வேறு நாடுகளில் குடியுரிமை பெறுவது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்.

Update: 2022-01-28 14:28 GMT

இந்திய பொருளாதாரத்தில் இருக்கும் பெரும்பாலான பணக்கார வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்(NRI) மக்கள் வெளிநாடுகளில் தற்போது குடியுரிமை பெறுவதை குறியாக வைத்துள்ளார்கள். இதன் மூலம் இந்தியாவின் கனவாக இருக்கும் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சார்பில் கூறப்படுகிறது. ஏனெனில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தங்கள் இருக்கும் நாட்களைக் குறைத்துக் கொள்வதன் மூலமாக அவர்கள் இந்த நாட்டிற்கும் வரி செலுத்துவது தடுக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின வருகை நாட்கள் 182 இல் இருந்து 120 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 


இதன் காரணமாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை வெளிநாட்டில் பெற வேண்டும் என்பதே நோக்கமாக வைத்துள்ளார்கள். பெரும்பாலான பணக்கார NRIகள் வெளிநாடுகளில் குடியுரிமை பெறுவது அவர்கள் செலுத்தும் வரிகளை குறைப்பதாக கூறுகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் இந்தியாவில் 120 நாட்களுக்கு மேல் இருந்தால் அவர் இந்திய வருமான வரித்துறைக்கு வரியைச் செலுத்த வேண்டும். குறிப்பாக உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக மக்கள் வெளிநாடுகளில் குடியேறிய அதிக நபர்கள் கொண்ட நாடாக இந்திய அறியப்படுகிறது.  


தற்போதைய அறிக்கை முடிவின்படி சுமார் 7000 நபர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை வாங்கியதாக அறிக்கை முடிவு கூறுகிறது. தற்போதைய வரி நிபுணர்களின் கருத்துப்படி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் தங்கும் நாட்களை அதிகரிப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து அதிகபட்சமாக மறைமுகப் வரியான ஜிஎஸ்டி அதிக அளவில் பெற முடியும் என்றும் கூறியுள்ளார்கள். எனவே அவர்கள் இந்தியாவில் இருக்கும் நாட்களே அதிகரிப்பதன் மூலம் அவர்களின் குடியுரிமை வெளிநாடுகளில் செய்வது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

Input & Image courtesy: Economic times

Tags:    

Similar News