மகாகவி பாரதியாரின் நினைவுநாள்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வேண்டுகோள் !

தமிழகத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் குறித்து சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு வேண்டுகோளை தமிழக முதல்வர் அவர்களிடம் தற்போது முன் வைத்துள்ளது.

Update: 2021-09-12 13:17 GMT

மகாகவி பாரதியார்  அவர்கள் இறந்தது செப்டம்பர் 12ஆம் நாள் என்பதால் ஆண்டுதோறும் செப்டம்பர் 12ஆம் தேதியில் தான் மகாகவி நாளைக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக தலைவர் திரு. ஆண்டியப்பன் அவர்கள் எழுதிய கடிதத்தில் இது பற்றி அவர் கூறியுள்ளார். பாரதியார் இறந்த நாள் 12.09.1921 என்பது தான் சரி என்றும், 11.09.1921 என்பது தவறு என்றும் அவர் தற்பொழுது சுட்டிக் காட்டியுள்ளார்.




அதற்குச் சான்றாக அவர் சென்னை மாநகராட்சி வழங்கிய பாரதியாரின் இறப்புச் சான்றிதழும் எட்டையபுரத்தில் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசுஅறிவித்த அவர் வாழ்ந்த வீட்டில் பதிக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையும் இருக்கின்றன என்றார். ஆனால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆண்டுதோறும் பாரதியார் மறைந்த செப்டம்பர் 11 'மகாகவி நாளாகக்' கடைப்பிடிக்கப்டும் என்று அறிவித்திருப்பது தவறு என்றும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் ஆண்டியப்பன் குறிப்பிட்டுள்ளார்.




பாரதியாரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் எட்டையபுரத்தில் பாரதியார் நினைவு இல்லத்தில் பதிக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகை ஆகியவற்றின் நகல்களையும் முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மகாகவி நாளின் தேதியை மாற்றும்படி தமிழக முதல்வக்குத் தாம் எழுதியுள்ள கடிதத்தின் நகல் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருக்கும் அனுப்பியுள்யதாக தெரிவித்த அவர் அவர்களின் இறுதி முடிவிற்காக அனைவரும் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Input & image courtesy:dinamalar



Tags:    

Similar News