ஓமிக்ரான் வைரஸ் எதிரொலி: சிங்கப்பூரில் RTL பயணிகள் நுழைவதற்குத் தடை !

உருமாறி உள்ள ஓமிக்ரான் வைரஸ் எதிரொலி காரணமாக சிங்கப்பூரில் RTL பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-06 14:35 GMT

உலக அளவில் தற்போது உருமாறி உள்ள இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் அறியப்பட்டுள்ளது. குறிப்பாக இது 50 வகையான உரு மாற்றங்களை எதிர்கொள்ளும் என்றும், மிகக் கொடிய வைரசால் டெல்டா வைரஸை விடவும் இது மனிதர்களுக்கு வேகமாகப் பரவக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் எல்லைகளை பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அயல்நாடுகளில் இருந்து தங்களுடைய நாடுகளுக்கு வரும் பயணிகளை மீது அவர்கள் எச்சரிக்கை செலுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது சிங்கப்பூரில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிபந்தனைகளுடன் கூடிய பயணிகள் வருகையை அனுமதித்து உள்ளது. 


குறிப்பாக சிங்கப்பூரில் தற்பொழுது 2 தடுப்பூசிகளையும் முழுமையாக போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் இந்த பயணத்திற்கு VTL( Vaccinated Traval Lanes) என்று அழைக்கப்படுகிறது எனவே முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்ட பயணிகளின் வருகையை மட்டுமே அனுமதித்து வந்த சிங்கப்பூர் அரசாங்கம் தற்பொழுது அவர்களுக்கும் அனுமதியை மறுத்துள்ளது. எனவே சிங்கப்பூரில் குறிப்பாக கட்டுமானம் சார்ந்த தொழில்களில் மிகச்சிறப்பாக ஈடுபடும் அயல் நாட்டைச் சார்ந்த மக்களுக்கு அதாவது தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய அனுமதிக்கு Work Pass வழங்கப்படும். 


எனவே இந்த Work Pass -னை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு சிங்கப்பூரில் அவர்கள் பயணம் செய்யமுடியும். மற்ற அனைத்து பயணிகளுக்கும் தற்பொழுது அனுமதி மறுக்க பட்டுள்ளதாக சிங்கப்பூர் மனித வள மேம்பாட்டு துறை விதித்துள்ளது. காரணம் , அதிகமாக பரவும் தொற்று காரணமாக நாட்டினுள் மீண்டும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் இந்த செயல்களைச் செய்துள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Economic times




Tags:    

Similar News