நுபுர் சர்மா விவகாரத்தில் குவைத் நாட்டில் போராடியவர்களை வாழ்நாள் தடையுடன் திருப்பி அனுப்புகிறதா குவைத் அரசு?
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக போராட்டம் நடத்திய வெளிநாட்டவர்களை நாடுகடத்துவது குறித்து குவைத் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக போராட்டம் நடத்திய வெளிநாட்டவர்களை நாடுகடத்துவது குறித்து குவைத் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்வினையாக அரபு நாடுகள் மத்தியில் பெரும் சர்ச்சை நிலவியது, இதனையடுத்து நுபுர் சர்மாவை பா.ஜ.க தலைமை கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை எடுத்தது.
இந்த சூழலில் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களும், பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் பாதுகாப்பையும் மீறி மத்திய அரசையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நாட்டின் சட்டதிட்டங்களை மீறும் வகையில் குவைத் நாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்களை குறித்து அரசு நாடுகடத்த உள்ளது என சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில மொழி நாளிதழான அரப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களுக்கு சட்டங்களை மதிக்க வேண்டும், குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் எந்த வகையான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கூடாது என்பது நம் சட்டம், நாட்டின் சட்டங்களை மற்றும் விதிமுறைகளை மீறியதால் வெளிநாட்டவர்களுக்கு நாடு கடத்தலை தடுத்த முடிவு செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் சட்டபூர்வமாக சட்டபூர்வமாக வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2019 ம் ஆண்டு கணக்குப்படி 10 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.