இந்தியாவின் முக்கிய ஆவணங்கள்: பாகிஸ்தானுக்கு விற்ற அதிகாரி கைது!
இந்திய ராணுவத்தின் முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை பாகிஸ்தானுக்கு விற்ற ராணுவ அதிகாரி கைது.
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் உள்ள விமானப்படை ஆவண காப்பகத்தில் பணிபுரியும் நிர்வாக உதவி அதிகாரியாக ஒருவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதிகாரியான தேவேந்திரா நாராயண் சர்மா என்பவர் இந்திய ராணுவத்தின் முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை பாகிஸ்தான் ராணுவத்திடம் கொடுத்ததன் காரணமாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரை டெல்லி போலீசார் கடந்த வாரம் கைது செய்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்தின் தகவல்கள் அடங்கிய ஆவணத்தை பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பாக வேலை பார்க்கும் பெண் ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இந்திய ராணுவத்தின் படைத்தளங்கள் பற்றிய முக்கிய விவரங்களை இவர் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்குரிய வேலைக்கான பணத்தை ஏஜெட் ஒருவர் மூலமாக பெற்றுக் கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இது குறித்து தகவல் கிடைத்ததும் அந்த அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்தி உள்ளார்கள்.
மேலும் சோதனை ஓட்டத்தின் போது இவர் ரகசியமாக பயன்படுத்திய கணினி மின்னணு சாதனங்கள் போன்ற பல ஆவணங்களை போலீசார் கையகப்படுத்திய தாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது உறுதியான பிறகு இவர் பணியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்திவருகிறது. மேலும் இந்த வழக்கில் நான்கு சிபிஐ அதிகாரி களும் மறைமுகமாக வேலை செய்து உள்ளார்கள் என்பதும் தெரியவருகிறது. எனவே அவர்களும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Input & Image courtesy:Dinamalar News