உக்ரைன் சுதந்திர தினம் - மாபெரும் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் ரஷ்யா!

உக்ரைன் சுதந்திர தினத்தந்தி மாபெரும் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் பிரதமர் தகவல்.

Update: 2022-08-22 08:57 GMT

வருகின்ற இருபத்தி நான்காம் தேதி உக்ரைன் சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறது. எனவே இந்த சுதந்திர தினத்தில் உக்ரைன் மீது ரஷ்யா மாபெரும் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் உளவுப்படை மூலமாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. மாபெரும் தாக்குதல் நடைபெறும் என்ற தகவலை தொடர்ந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சுதந்திர தினத்தை கொண்டாடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ள இந்நிலையில் உக்ரைன் முழுவதும் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகின்ற இந்த ஒரு நிலையில்,  தற்போது கிரீமியா என்ற பகுதியில் நடத்தப்பட்ட புதிய குண்டு வெடிப்பு தாக்குதல்கள், அங்குள்ள அணுமின் நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் பொதுமக்களிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் வருகின்ற 24ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மக்கள் அதிகமாக கூட்டமாக கூடுவார்கள். இதனை பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரும் தாக்குதலை நடத்த இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருப்பதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


உக்ரைன் சோவியத் ரஷ்யா ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 31 ஆவது ஆண்டு முடிவை குறிக்கும் வகையில் இந்த சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக உக்ரைன் தலைநகர் கார்கிவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் சுதந்திர தினத்திற்கு முன்னதாக ரஷியாவின் கொடூர தாக்குதல் நடக்கலாம் என்று நாட்டு மக்களுக்கு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Input & Image courtesy:Dailythanthi

Tags:    

Similar News