பொருளாதார குற்றங்கள் பற்றி ஐ.நா மனித உரிமை ஆணையம் அறிக்கை - இலங்கை எதிர்ப்பு?

பொருளாதார குற்றங்கள் பற்றிய கருத்துக்களை ஐ.நா மனித உரிமை ஆணையம் அறிக்கைக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-09-14 01:28 GMT

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரின் ஐக்கிய நாட்டு மனித உரிமை கவுன்சில் 51வது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதன் ஐ.நா மனித உரிமை ஆணையர் ஆணை யாளர் நடா அல் நசிப் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் இலங்கையில் நடந்து வரும் பொருளாதார குற்றங்களும் ஊழலும் மனித உரிமை மீறல்களும் தண்டனை பெறாமல் தப்புவது தான் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று கூறப்பட்டு இருந்தது.


இதனை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இலங்கை தன்னுடைய பதிலை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி அலி சப்ரி சபாரி இது பற்றி கூறுகையில், ஐ.நா மனித உரிமை பொறுப்பு ஆணையாளர் இலங்கையில் பொருளாதார குற்றங்கள் நடந்துள்ளதாக கூறியுள்ளார். 


அதன் அர்த்தம் புரியவில்லை. இருப்பினும் தனது அதிகார வரம்பை மீறி அவர் நடந்திருப்பது கவலைக்குரியது. அவரது சிபாரிசுகள் அடிப்படையில் எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தீர்மானம் ஐ.நா கூட்ட தொடரில் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் தெரியப்படுகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News