அமெரிக்காவைச் சேர்ந்த NRI ஒருவரால் உருவாக்கிய புதிய OTT தளம்.!
அமெரிக்காவைச் சேர்ந்த NRI ஒருவரால் புதிய OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் தன்னுடைய திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக புதிய OTT Hit.movie தளத்தை உருவாக்கி உள்ளார். அதற்கு முதலில் OTT தளம் என்றால் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். OTT தளம் Over The Top என்று அழைக்கப்படுகிறது. இதில் முற்றிலுமாக இணையதளம் மூலமாக இயக்கப்படுகிறது. இணையதள வசதி உள்ள எவரும் இந்த தளத்தை பயன்படுத்தி, குறிப்பாக இவரால் உருவாக்கப்பட்டுள்ள இதைப் பயன்படுத்தி திரைகளில் வெளியாகும் படங்களை பார்க்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
இவருக்கு சிறு வயதில் இருந்தே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் மேலும் இவருடைய நண்பர் மூலமாக இதை உருவாக்கியதாகவும் அவர் மேலும் கூறுகிறார். மேலும் இந்த தளத்தை பார்வையிடும் பார்வையாளர்கள் இதை நிச்சயம் சப்ஸ்கிரைப் செய்தாக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேலும் இவற்றிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று அவசியமில்லை என்பது இதிலுள்ள முக்கிய சிறப்பம்சம். இன்றைய பல்வேறு OTT தளங்களில் subscription என்ற பெயரில், வாடிக்கையாளர்களிடமிருந்து நிச்சயமாக 500 ரூபாய் வசூலிக்கிறார்கள்.
அத்தகைய OTT தளங்களில் இருந்து, இவர் உருவாகியுள்ள இந்த தொழில்நுட்பம் பார்வையாளர்களை மட்டுமில்லாது பலரையும் பொழுதுபோக்கிற்காக ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். விஜயவாடாவில் பிறந்து, அமெரிக்காவில் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான NRI ரஞ்சித், நேரடி ரிலீஸுக்கு திரையரங்குகள் கிடைக்காத சிறிய பட்ஜெட் படங்களுக்கு தனது தளம் மிகவும் பொருத்தமானது என்கிறார்.
Input & Image courtesy: Hindustantimes