பாகிஸ்தானில் படிப்பு, இனி இந்தியாவில் உதவாதா? - மாணவர்களின் நிலை என்ன?

வெளிநாடுகளில் உயர்கல்வி பிடித்தவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைக்காதா? UGC சொல்வது என்ன?

Update: 2022-04-29 01:19 GMT

நேற்று உயர்கல்வி துறை குறித்து வெளியிட்ட அறிவிப்பில், பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC) அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும் (AICTE) இந்திய மாணவர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உள்ள எந்த கல்லூரியிலும், கல்வி நிறுவனத்திலும் மாணவர்கள் சேரவேண்டாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏனென்றால், பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ? அல்லது அதே படிப்பை இந்தியாவில் தொடரவோ முடியாது? என்றும் தெரிவித்துள்ளது.


இது குறித்து UGC & AICTE வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது பற்றி கூறுகையில், "உயர்கல்விக்காக பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அனைத்து இந்திய மாணவர்களும் அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்திய குடிமகன், பாகிஸ்தானின் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு கல்லூரியில், கல்வி நிறுவனத்தில் சேர விரும்பினால், பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதியின் அடிப்படையில் இந்தியாவில் வேலை தேடுவதற்கோ அல்லது உயர்கல்வி பெறுவதற்கோ தகுதியானதாக கருதப்படாது.  


எனவே தற்போது வரை பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தவர்கள் இந்த விளக்கில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உயர்கல்வி பட்டம் பெற்றவர் மற்றும் இந்தியாவில் குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் அவரது குழந்தைகள் அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியை பெற்ற பிறகு இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Input & Image courtesy: India News

Tags:    

Similar News