NRI-களால் இந்தியா மிகவும் பெருமைப்படுகிறது: பிரதமர் பெருமிதம்!

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நடவடிக்கைகள் மூலம் இந்தியா பெருமைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-01-10 14:06 GMT

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். குறிப்பாக அவர்கள் இந்தியாவின் பெருமைகளை பல்வேறு நாடுகளிலும் நிலைநாட்டி வருகிறார்கள். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பங்கு மிகவும் மகத்தானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்களின் தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 


அந்தவகையில் நேற்றைய தினம் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்குப் பிரவாசி பாரதிய திவாஸ் அல்லது NRI தின வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி மேலும் கூறுகையில், "NRIகள் உலகம் முழுவதும் தங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளனர் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளனர்" என்று பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் வேர்களுடன் இணைந்திருப்பதையும் அவர் பாராட்டினார். அவர்களின் சாதனைகளுக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். 


இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு இந்திய சமூகத்தின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில், பிரவாசி பாரதிய திவாஸ் (PBD) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1915ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய மகாத்மா காந்தி, இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தி, இந்தியர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றியமைத்த இந்த நாளில்தான் ஜனவரி 9ஆம் தேதி இந்த நிகழ்வைக் கொண்டாடத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Input & Image courtesy: News




Tags:    

Similar News