2022 ஆம் ஆண்டில் NRIகள் எதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்?

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகம் ஆர்வம் செலுத்தும் முதலீட்டு நிறுவனங்கள் என்னென்ன?

Update: 2022-01-11 14:26 GMT

கடந்த ஆண்டு நோய் தொற்றுக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து குறைந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் முதலீடு பங்குச் சந்தைகளை காட்டிலும் பெரும்பாலும் வீடுகளில் அவர்களுடைய கவனம் செலுத்தப்பட்டது. தங்களுக்கு என்று ஒரு சொந்த வீட்டை வாங்கும் நோக்கில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்த நோய் தோற்று காலத்தில் மிகவும் உன்னிப்பாக கவனத்தை செலுத்தினார்கள். ஆனால் தற்பொழுது இந்த வருடம் அவர்கள் முழு கவனம் பங்குச்சந்தை முதலீடுகள் மீது திரும்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி போதுமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பங்குச்சந்தைகள் தங்களுடைய முதலீடுகளை முதலீடு செய்வதன் மூலம் வருங்காலத்தில் நிறைய லாபங்களைப் பெற முடியும் என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு தொழில் நுட்பம் மற்றும் பங்குச்சந்தை துறைகள் நல்ல முறையில் முன்னேற்றம் அடைய உள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளார்கள்.  


தற்பொழுது வங்கிகளும் தங்களுடைய முதலீட்டின் மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளன பொருளாதாரமும் நீட்சி அடைய ஆரம்பித்துள்ள இத்தகைய சூழ்நிலையில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தங்களுடைய முதலீடுகளை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் வருங்காலத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. 

Input & Image courtesy: Economic times




Tags:    

Similar News