ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க இதுதான் காரணம்: பின்னணி என்ன?
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க இதுதான் பின்னணியில் உள்ள காரணமா?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு, வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக அந்நாட்டின் மீது இராணுவத் தாக்குதலில் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா தனது பரப்பளவில் மிகவும் பெரிய நாடு. இது 36,000 கிமீ நீளமான கடற்கரை மற்றும் 17 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இருந்தாலும் ரஷ்யாவின் வர்த்தகமானது துறைமுகத்தை தான் நம்பியிருக்கும். வர்த்தகத்திற்கு உக்ரைன் துறைமுகம் தேவை. மேலும் வர்த்தகம் ஆண்டு முழுவதும் சிறப்பாக நடைபெறுவதற்கும் உலக நாடுகளுடன் தொடர்பைக் கொண்டுள்ள உக்ரைனின் துறைமுகம் ரஷ்யாவிற்கு மிகவும் முக்கியமானதாகும். ரஷ்யா இதை மிகவும் விரும்புகிறது.
உக்ரைனில் கிரிமியாவின் பகுதியில் உள்ள துறைமுகமான செவஸ்டபோல் இருந்தது. இந்த துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கும் அதன் கப்பல்களை வர்த்தகத்திற்காக இயக்குவதற்கும் ரஷ்யா குத்தகைக்கு எடுத்திருந்தது. ஆனால் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது நேட்டோவிற்குள் சென்றால், இந்த துறைமுகத்தை இழக்கும் அபாயம் ரஷ்யாவில் உள்ளது. காரணம் ரஷ்யாவில் உள்ள துறைமுகங்கள் குறிப்பாக ஆண்டின் பாதி பகுதியில் துறைமுகத்தின் தண்ணீர் பனிக் கட்டிகளாக மாறிவிடும். இதன் காரணமாகவும் கடல்வழி வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்படும்.
எனவே உக்ரைன் மற்ற நாடுகளுடன் சேருவதை விரும்பாத ரஷ்யா தற்பொழுது தலைநகர் கெய்வில் ரஷ்யப் படைகளுடன் மோதல் ஏற்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. வியாழன் அன்று உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஏராளமானோர் கொல்லப்பட்டதாகக் கூறினார். வெள்ளிக்கிழமை அதிகாலையில், தலைநகரில் பல வெடிச்சத்தங்கள் கேட்டன. சமீபத்திய முன்னேற்றங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை அறிவித்துள்ளன.
Input & Image courtesy:News