தி.மு.க ஆட்சியில் பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை - அண்ணாமலை

தி.மு.க ஆட்சியில் பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பு கிடையாது என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

Update: 2022-10-31 03:33 GMT

தி.மு.க ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது: 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று மதுரைக்கு பயணம் செய்தார். அவர் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட நிர்வாகி H.ராஜா, மாநகர மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொழுது மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறுகையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த வளர்ந்த மதுரை மண்ணில் அவருக்கு மரியாதை செய்வது பெருமை தருகிறது. பசும்பொன் தேவர் திருமகனார் அற்புதமான பல்வேறு கருத்துக்களை விட்டு சென்று இருக்கிறார். அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் கைப்பாவையாக்கிவிட்டனர்.


தி.மு.க ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்திரவாதம் கிடைத்து வருவது கிடையாது. இங்கு பாதுகாப்பான சூழ்நிலை நிலவுவதாக தெரியவில்லை. எனவே தேவர் மீண்டும் அவதரிக்க வேண்டும் தமிழ் மண் எப்படி இருக்க வேண்டும்? என்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் நினைத்தார்களோ? அதை பா.ஜ.க நிச்சயமாக நிறைவேற்றும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News