வாழ்நாள் முழுவதும் இந்துமதத்தை இழிவுபடுத்திய சுப.வீரபாண்டியன் பிறந்தநாள் இன்று!

Update: 2021-04-22 08:30 GMT

இந்துமத எதிர்ப்பையே தன் வாழ்நாள் இலக்காக கொண்ட திராவிடர் கழகத்தின் சுப.வீரபாண்டியன் அவர்களின் பிறந்தநாள் இன்று. வழக்கமாக ஒருவர் பிறந்தநாள் அன்று அவரை பற்றி நல்ல நினைவுகள், நல்ல செயல்கள், நல்ல பேச்சுக்கள் என அனைத்தையும் நினைவுகூறுவது வழக்கம். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் வாழும் இந்து சமுதாயத்தை ஒரு பொருட்டாகவும் மதிக்காமல், அவர்களின் உணர்வுகளை துட்சமென நினைத்து வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி வநதவர் இந்த சுப.வீரபாண்டியன்.

இதோ அவர் இந்துக்களையும், அவர்களின் சடங்குகளையும் எவ்வாறு இழிவாக பேசி ஏளனம் செய்தார் என அவர் பிறந்த நாள் அன்றே சற்று நினைவு கூர்வோம்.

கடந்த 2020'ம் ஆண்டு ஏப்ரல் 10'ம் தேதி சுப.வீரபாண்டியன் அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் கொரோனோ தொற்றை குறிப்பிட்டு அதனை அத்தி வரதர் நிகழ்வுடன் தொடர்புபடுத்தி ஏளனமாக பதிவிட்டது என்னவென்றால், "அந்தி வரதர் வர்றதால் நல்லது நடக்கும்ன்னு சொல்லிட்டு திரிச்சவனுங்க யாராச்சும் பார்த்தீங்களா?" ன்னு நக்கலாக பதிவிட்டார். 40 வருடங்களுக்கு ஒருமுறை வரும் அத்தி வரதர் நிகழ்வை அனைத்து இந்து சமுதாய மக்களும் வரலாற்று சிறப்பாக கொண்டாடும் வேளையில் அதனை கிண்டல் செய்து தனக்கு இந்து மதத்தின் மேல் உள்ள ஈன இழி எண்ணத்தை வெளிப்படுத்தினார் சுப.வீரபாண்டியன்.

மற்றுமொரு தனது அறிக்கையில், "வேதங்களில் பெரிதாகப் பேசப்படும் தேவதேவன் இந்திரனே ஆவான். பிறகு, சோமன், வாயு, அக்கினி ஆகிய தேவர்களைப் பார்க்க முடிகிறது. இவர்கள் யாரும் இன்று எந்தக் கோயிலிலும் இல்லை. யாரும் இவர்களை வணங்குவதும் இல்லை.

பிறகு வரும் புராணக் கதைகளில் இந்திரன் மதிப்பு குறைந்து போகிறது. ஏறத்தாழ ஒரு காமுகனாக இந்திரன் ஆக்கப்படுகிறான். உபநிடதங்களில் - அதுவும் பிற்கால உபநிடதங்களில்தான் - சிவன், விஷ்ணு போன்ற கடவுளர்கள் வருகின்றனர். தொல்காப்பியத்தில், முருகன் (சேயோன்), திருமால் (மாயோன்), வருணன், இந்திரன் ஆகியோர் ஒவ்வொரு திணைக்கும் உரிய ஒவ்வொரு கடவுள்களாகக் காட்டப்படுகின்றனர். பிறகு, பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் என்று தொடங்கி அய்யப்பன் வரையில் புதிய புதிய கடவுள்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்.

இவர்கள் தவிர, உழைக்கும் மக்களின் கடவுளர் வரிசை ஒன்றும் உள்ளது. அதனை நாட்டார் தெய்வ வழிபாடு என்று குறிப்பர். அதனை ஏற்காதவர்கள் அதனைச் சிறுதெய்வ வழிபாடு என்று கூறிச் சிறுமைப்படுத்துவர். நாட்டார் தெய்வ வழிபாட்டில், அம்மன்கள், சுடலை மாடன்கள், கறுப்பர்கள் என்று பல்வேறு வகையினர் உண்டு.

சிவன், விஷ்ணுவை வணங்குபவர்கள் சுடலை மாடன், பதினெட்டாம் படிக் கருப்பு போன்ற தெய்வங்களை வணங்க மாட்டார்கள். அம்பாளை வணங்குவோர், மாரியம்மனை வணங்குவதில் தயக்கம் காட்டுவர். சாமியாடுதல், பால் குடம் எடுத்தல், அக்கினிச் சட்டி ஏந்துதல், தீ மிதித்தல் போன்றவை எல்லாம் சிவ, விஷ்ணு கோயில்களில் பார்க்க முடியாத சடங்குகள். ஆனால் எல்லாம் இந்துக் கடவுள்களே. எல்லோரும் இந்துக்களே!" என வார்த்தை கோர்வையில் தனது அறிக்கையில் இந்துமத துவேஷத்தை வெளிப்படுத்தினார்.

ஏன் பதினெட்டாம் படி கருப்பை வணங்குகிறவர்கள் விஷ்ணுவை வணங்கமாட்டார்கள் என இந்த சுப.வீரபாண்டியன் எதை வைத்து கூறிமார் எம தெரியவில்லை? இன்னும் மதுரை அழகர் மலை கோவில் வாசலில் பதிணெட்டாம் படி கருப்பை ஙணங்கிவிட்டுதான் அழகர் தரிசனத்திற்கே பக்தர்கள் செல்வார்கள் என்பது இவ்வளவு வயதாகியும் இந்த மனிதருக்கு தெரியவில்லை என்பது இவரின் பகுத்தறிவின் வளர்ச்சி அளவை காட்டுகிறது.

போதாக்குறைக்கு ஒருமுறை சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டுகிறோம் என்ற பெயரில் கேரளாவுக்கு அரிசி கடத்தப்படுவதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசியிருந்தார். அதாவது ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து பயபக்தியுடன் இருமுடியை ஏந்தி ஐயனின் திருவடி தேடி பயணம் மேற்கொள்வதை இவ்வாறு கேலியாக பேசினார் இந்த பகுத்தறிவு சுப.வீரபாண்டியன்.

ஆனார் இதுவரை இஸ்லாமியர்களை பற்றியோ, நாகூர் ஆலயத்தை பற்றியோ, கிருஸ்வர்களை பற்றியோ, வேளாங்கண்ணி பற்றியோ ஒருமுறை கூட இத்தனை வயதில் இந்த மனிதன் பேசியதே இல்லை ஆனால் சமுதாயத்தில் பெரிய பகுத்தறிவுவாதி.

பகுத்தறிவு வாதிகளாக பொதுவானவர்களாக இருப்பதில் தவறில்லை ஆனால் பகுத்தறிவு'வியாதி'களாக இந்து மத எதிர்பபை மட்டும் கையில் எடுப்பது மண்ணிக்க முடியாத குற்றம். இத்தனை வயதாகிவிட்டது மிச்சமுள்ள வாழ்நாள் காலத்திலாவது நல்புத்தி கிடைக்கட்டும் என ஆண்டவனை பிராத்திக்கிறோம்.

Similar News