ஊரடங்கு விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் வணிகர் சங்கம் - வணிகர் சங்கமா? அல்லது தி.மு.க ஆதரவு அமைப்பா?

Update: 2021-05-06 07:30 GMT

கொரோனோ ஊரடங்கு விவகாரத்தில் வணிகர் சங்கம் இரட்டை வேடம் போடுகிறதா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

"திடீர் ஊரடங்கு அறிவிப்பு ஏற்புடையதல்ல. இதனைக் காரணம் காட்டி அதிகாரிகள் கடைகளைப் பூட்டினால் அரசு அலுவலங்கள் முற்றுகையிடப்படும்" என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார்.

இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "அரசின் திடீர் அறிவிப்பால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுகின்றன. ஞாயிறு ஊரடங்கால் சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதுகிறது. அதிகாரிகள் வியாபாரிகளின் கடைகளைப் பூட்டினால் அரசு அலுவலங்கள் முற்றுகையிடப்படும்.

அரசு எடுக்கும் நடவடிக்கைகள் வியாபாரிகள் விரோதமாக உள்ளதை சுட்டி காண்பித்தும், எங்களது பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தியும் ஆட்சியாளர்கள் இடத்தில் மனு அளிக்கப்பட உள்ளது. ஊரடங்கு எப்படி அறிவித்தால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கு சரியாக இருக்கும் என்பதை எங்களை ஆலோசித்து அரசு அறிவிக்க வேண்டும். திடீரென ஊரடங்கை அரசு அறிவிப்பது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்பொழுது அதே தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா அவர்கள் "15 நாட்கள் முழு ஊரடங்கை அரசு பிறப்பித்தால் எங்கள் சார்பில் இருந்து முழு ஒத்துழைப்பு தருவோம்" என்று கூறியுள்ளார்.


கடந்த மாதம் ஊரடங்கை ஆதரிக்க மாட்டோம் என கூறிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இந்த வாரம் ஊரடங்கை ஆதரிப்போம் என மாற்றி கூறியது எதற்காக என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க வேட்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவின் மகன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆகையால் இப்பொது அமைந்திருப்பது தி.மு.க ஆட்சி எனவே தன் மகனை எம்.எல்.ஏ ஆக்கி அழகுபார்த்த கட்சிக்கு நம் வணிகர் சங்கத்தின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதே சிறந்தது என விக்கிரமராஜா நினைத்துவிட்டாரோ என தோன்றுகிறது.


இல்லையேல் கடந்த மாதம் அ.தி.மு.க ஆட்சியில் ஊரடங்கு வேண்டாம் என கூறிவிட்டு தற்பொழுது வேண்டும் என கூற வேண்டிய அவசியம் என்ன? என மக்கள் கேட்கின்றனர்.

Similar News