வாக்காளர்களின் வயது விகிதாச்சாரம் - மிரண்டு போய் நிற்கும் தி.மு.க! ஒர் அலசல்!

Update: 2021-04-06 02:45 GMT

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்களின் முழு பலத்தை பிரயோகித்து களம் காண்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக அரசியலில் மாறி மாறி கொலோச்சி வந்த அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி ஆகிய இருவரும் இல்லாததே காரணம். இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் இல்லாத நிலையில் தங்களது கட்சியை அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை இரு கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களுக்கும் உள்ளது.

இதில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் கடைகோடி தொண்டனாக இருந்து கிளை செயலாளர் என தன் கட்சி பொறுப்பை துவங்கி பின் படிப்படியாக உயர்ந்து பின்னர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக முதல்வராக அ.தி.மு.க சார்பில் பொறுப்பேற்று கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை இந்தியாவின் முன்மாதிரி மாநிலம் என அனைத்து துறைகளிலும் விருது வாங்கும் அளவிற்கு ஆட்சி செய்து வருகிறார்.

மற்றொரு பக்கம் தி.மு.க, அண்ணாந்துரையால் துவங்கப்பட்டு பின் அவரின் மறைவுக்கு பிறகு இரண்டாம் கட்ட தலைவர்களின் துணையோடு மு.கருணாநிதி கட்டி காத்த இயக்கம். இப்பொழுது இதில் கருணாநிதியுடன் தி.மு.க-வை வளர்த்த பலர் உயிர்ப்புடன், துடிப்புடன் இருக்கையில் அனைவரையும் புறந்தள்ளிவிட்டு ஏன் தனது மூத்த அண்ணன் மு.க.அழகிரியை கூட வர விடாமல் பணிகளை செய்துவிட்டு தலைமை பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றுள்ளார். தற்பொழுது அதனை வைத்து அடுத்த கட்டத்திற்கு முதல்வர் பதவிக்கும் இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இப்படி இரு கட்சிகளும் இந்த தேர்தலை வாழ்வா, சாவா என்கிற ரீதியில் எண்ணத்தில் வைத்து போட்டியிடும் வேளையில் வாக்காளர்களின் வயது மற்றும் வயது சார்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கையை பிரித்து பார்க்கையில் இது தி.மு.க-விற்கே அதிகம் பாதகம் ஏற்படுத்தும் என தெரிகிறது. மேலும் இதனை தி.மு.க-வும் நன்கு உணர்ந்துள்ளது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், இதில் இளைஞர்களாக 18 வயதில் இருந்து 40 வயது வரை 1,52,46,190 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதாவது மொத்த வாக்காளர்கள் பட்டியலில் இது 25 சதவீதமாகும். இதில் தான் தி.மு.க சற்று மிரட்சியுடனே தேர்தலை எதிர்கொள்கிறது.

காரணமே, இவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தி.மு.க-வின் உண்மை முகமான வாரிசு அரசியல், இந்து மத எதிர்ப்பு, பெண்களின் மீதான கொடுமைகள், ஊழல் வழக்குகள், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு குறிப்பாக கட்சியில் கடைகோடி தொண்டர்கள் வரை ஏழை, எளிய வியாபாரிகளிடம் காசு குடுக்காமல் பிரச்சனை செய்வது என அனைத்துமே செய்திகள் மூலமாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் நன்கு பரிச்சர்யமாகும். இவ்வாறு இருக்கையில் இவர்களில் கிட்டதட்ட முக்கால்வாசி பேர் தி.மு.க வருவதை விரும்பவில்லை என்பது தி.மு.க-விற்கே தெரியும் என்பதால்தான் இந்த மிரட்சி.

மேலும் இது கொரோனோ காலம் என்பதால் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களின் வாக்குபதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. இதுவும் தி.மு.க-வுக்கு பின்னடைவே. ஏனெனில் இதுபோன்ற 60 வயதுக்கு மேல் உள்ளவர்களிடம்தான் தி.மு.க வாக்கு வங்கியே கணிசமாக உள்ளது.

இப்படி, தன் வாழ்நாளில் தி.மு.க பயத்துடன் ஒரு தேர்தலையும் எதிர்கொண்டதில்லை என்பது வரலாறு.

Similar News