நெரலூரு-தருமபுரிக்கு மீண்டும் ஒரு 4 வழிச்சாலை திட்டத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

Update: 2022-05-26 13:42 GMT

தமிழகத்திற்கு ரூ.31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், சில திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

இதில் தேசிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை, ரயில்வே துறை உள்ளிட்ட அரசு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் ஏற்கனவே முடிக்கப்பட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மற்ற 6 திட்டங்கள், தொடங்குவதற்கான அடிக்கல்லையும் நாட்டினார். இதில் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள 5 திட்டங்களின் மதிப்பு ரூ.2,900 கோடியாகும். அதில் 75 கி.மீ நீளமுள்ள மதுரை, தேனி அகல ரயில் பாதை திட்டம், தாம்பரம், செங்கல்பட்டு இடையில் 30 கி.மீ. நீளமுள்ள 3வது ரயில் பாதை திட்டமாகும்.

மேலும், 115 கி.மீ. நீளம் கொண்ட இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம். 271 கி.மீ நீளம் கொண்ட திருவள்ளூர், பெங்களூரு பகுதிக்கான இயற்கை எரிவாயு பதிக்கின்ற திட்டம், லைட் ஹவுஸ் திட்டத்தில் கட்டப்பட்ட 1,152 வீடுகள் ஆகும்.

மேலும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய மதிப்பு ரூ.28 ஆயிரத்து 500 கோடியாகும். அவை ரூ.14 ஆயிரத்து 870 கோடி செலவில் பெங்களூரு, சென்னை இடையே 262 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட உள்ள விரைவுச் சாலை திட்டம், சென்னை துறைமுகம் மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கிலான 4 வழி உயர்மட்ட சாலை திட்டம். நெரலூரு தருமபுரி பகுதியில் வழிச்சாலை அமைக்கப்படுகிறது. மற்றொன்று மீன்சுருட்டி, சிதம்பரம் பகுதியில் இரண்டு வழி நெடுஞ்சாலை, அது மட்டுமின்றி சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும் பணியாகும்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News