அமெரிக்காவில் இந்திய வம்சாவளிக்கு நீதிபதி பதவி: ஜோபைடன் பரிந்துரை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளிக்கு நீதிபதி பதவியை பரிந்துரை செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

Update: 2022-09-09 04:33 GMT

அமெரிக்காவில் வக்கீலாக பணியாற்றி வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் சுப்பிரமணியன். இவரை நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை தற்போது எடுத்துள்ளார். இது தொடர்பான பரிந்துரையை வாஷிங்டன் வெள்ளை மாளிகை முறைப்படி, அமெரிக்க செனட் சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று கொண்டு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்க பட்டுள்ளது.


அப்படிப்பட்ட பட்சத்தில் நியூயார்க்கு தெற்கும் மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகின்ற முதல் ஆசிய நாட்டினர் என்ற பெருமையை அருண் சுப்ரமணியன் பெறுவார். மேலும் 2007 ஆம் ஆண்டு முதல் அருண் சுப்பிரமணியம் நியூயார்க் நகரில் உள்ள சுஷ்மான் கார்ட் ஃப்ரை நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். மேலும் 2006 மற்றும் 2007 காலகட்டத்தில் அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரூட் வேடர் அவருடைய சட்ட எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.


இவர் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக நியமிக்க ஜோப் பரிந்துரைத்து இருப்பதை அங்குள்ள இந்திய சமூகத்தினர் வரவேற்று உள்ளார்கள். இதையடுத்து இந்திய அமெரிக்க அமைப்பு ஒன்றின் செயல் இயக்குனராக உள்ள மகிஷா கருத்து தெரிவிக்கையில், அருண் சுப்பிரமணியனின் நியூயர்க்கு தெற்கு மாவட்ட நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை செனட் சபை உறுதி செய்ததை கொண்டாடுவதற்கு நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

Input & Image courtesy:The Hindu

Tags:    

Similar News