கலிபோர்னியா: தமிழ் மன்றம் சார்பாக நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம் !
சாக்ரமென்ட்டோ தமிழ் மன்றம் சார்பாக நடைபெற்ற கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்.
கலிஃபோர்னியா சாக்ரமென்ட்டோ தமிழ் மன்றம் சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட்ட கோடைகால மெய்நிகர் பயிற்சி முகாம், சிறுவர் மற்றும் சிறுமியருக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது. அதில் தமிழில் சிறப்பாக பேசுவது, படிப்பது, பாட்டு மற்றும் போட்டோகிராஃபி என நான்கு வகையான வகுப்புகள் சிறுவர்கள், சிறுமியர்காக இடம்பெற்று இருந்தது. குறிப்பாக, ஒரு மாத காலமாக நடைபெற்ற கோடைகால சிறப்பு பயிற்சி தற்போதைய சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது.
கோடைகால வகுப்பு நிறைவு செய்யும் வகையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று நிறைவு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில், நமது முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி கலந்து கொண்டார். அதில் நேர்மறை எண்ணகளும், அறம் சார்ந்த வாழ்வியலும் என்ற தலைப்பில் மெய்யிணைக் கலந்துறையாடல் நடைபெற்றது. எனவே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவரின் உரை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
அவரின் யதார்த்தமான பேச்சு, இளைஞர்களின் வாழ்க்கை, எதிர்காலம், படிப்பு, வாழ்கையில் அறம், சமூகவலைத்தளங்களை பயன் படுத்துதல், நீதி நூல்களை கற்பது, மற்றும் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டு, ஆசிரியர்களின் முக்கியத்துவம், தாய் தந்தைக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவம் எப்படி என்பது முதல் பல்வேறு சிறப்பம்சங்களை அவர் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நிச்சயம் இது ஒரு சிறந்த வகுப்பாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Input: https://www.sactamil.org/
Image courtesy: Sacramento Tamil Mandrum