கோவை NRI தம்பதியினருக்கு தொற்று உறுதி: ஓமிக்ரான் ஆக இருக்குமோ என்ற சந்தேகம்?
கொரோனா டெஸ்ட் செய்யப்பட்ட NRI தம்பதியினருக்கு நோய்தொற்று உறுதியானது.
வைரஸ் தொற்று உருமாறிய இந்நிலையில் இந்திய அரசாங்கத்தினால் தீவிர கண்காணிப்பில் வெளிநாட்டு பயணிகள் உள்ளார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளில் கட்டாய தனிமைப் படுத்துதல், PCR டெஸ்ட் செய்த பிறகுதான் அவர்கள் இந்தியாவிற்குள் அனுமதிக்க படுகிறார்கள். ஏனெனில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து இந்த நோய் தோற்று மக்களுக்கு அதிகம் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவ குழுவினர் தரப்பில் கூறப்படுகின்றது.
ஸ்வீடனில் இருந்து புதுடெல்லி வழியாக இந்தியாவிற்கு பயணமான கோயம்புத்தூரை சேர்ந்த NRI தம்பதியினருக்கு கொரோனா உறுதியானது. இந்தியாவில் வந்து தரை இறங்கும் பொழுது தனிமைப்படுத்தல் மற்றும் டெஸ்ட் மாதிரிகள் அனைத்து பயணிகளுக்கும் செய்யப்படுவது வழக்கம். அதைப்போல இவர்களுக்கும் 8 நள் தனிமைப்படுத்துதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் உடைய டெஸ்ட் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்துகையில் இவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது.
மேலும் இதுபற்றி மருத்துவ குழுவினர் கூறுகையில், "இவர்கள் இருவருக்கும் நோய் தொற்று அறிகுறிகள் இருப்பதை தொடர்ந்து, ஓமிக்ரான் வைரஸ் பரவலாக இருக்குமோ? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. மேலும் இருவரும் மருத்துவமனையின் பாதுகாப்பின் கீழ் உள்ளார்கள். மேலும் இவர்கள் ESI மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும்" அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Input & Image courtesy: Times of India