சிங்கப்பூர்: இந்திய வம்சாவளிப் பெண்ணிற்கு 16 மாத காலச்சிறை தண்டனை !
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மோசடி குற்றத்திற்காக 16 மாதங்கள் சிறை தண்டனை.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ராஜகோபால் மாலினி. இவர் அங்குள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும் அந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இவர் பதவி வகிக்கிறார். இருந்தாலும் தற்போது அரசு வழங்கும் கொரோனா மானியத்தை பெறுவதற்காக பல்வேறு மோசடிகளில் இவர் ஈடுபட்டார். அதுமட்டும் இன்றி தான் வேலை பார்த்து வந்த கட்டுமான நிறுவனத்தில் இருந்து 4,000 சிங்கப்பூர் டாலரை கையாடல் செய்ததாகவும் புதிய குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில் ராஜகோபால் மாலினியை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவர் வேலை பார்க்கும் நிறுவனங்களில் பல்வேறு நிதி சம்பந்தப்பட்ட மோசடிகளை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.
அப்போது ராஜகோபால் மாலினி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்து இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கு தற்போது அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.
Input & Image courtesy:Straitstimes