சீனாவின் மருத்துவம் படிக்க விரும்புபவர்க்கு ஆலோசனை - சிரமங்களையும் பட்டியலிட்ட மத்திய அரசு!
சீனாவில் மருத்துவம் படிக்க விரும்புவர்களுக்கான ஆலோசனை சிரமங்கள் விதிமுறைகளையும் மத்திய அரசு பட்டியலில் இட்டது.
இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள மருத்துவம் படித்து வருகிறார்கள். ஆனால் கொரோனா காரணமாக அவர்களுக்கு விசா தடை காரணமாக வீட்டில் முடங்கி உள்ளார்கள். இந்நிலையில் தற்போது 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் சீன பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக பதிவு செய்து உள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அவர்கள் பெரும்பாலோனருக்கு மருத்துவம் படிக்க விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டு விசா தடைக்கு பின்னர் இப்பொழுது தான் சீனா குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அங்கு வருவதற்கு விசா வழங்க தொடங்கியுள்ளது.
ஆனால் அவர்கள் பலரும் நேரடி விமான சேவை இன்று தவிக்கிறார்கள். இந்திய - சீனா இடையிலான பேச்சு வார்த்தை இன்னும் நீடித்து வருகின்றது. இந்நிலையில் மத்திய சீன மருத்துவக் கல்லூரியில் இந்தியா உள்ளிட்ட பிற மாணவர்களை மருத்துவ படிப்பதற்கான பதிவு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மருத்துவ படிக்க விரும்புகின்ற மாணவர்களுக்கு விரிவான ஆலோசனை குறிப்புகள் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டது.
குறிப்பாக இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் சீனாவால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து ஆண்டு மருத்துவ படிப்பு அத்துடன் ஒரு ஆண்டு பயிற்சிக்கு, 45 மருத்துவ கல்லூரிகளை தவிர்த்து வேறு எங்கும் சேரக் கூடாது. சீன அரசு ஆங்கிலே மொழியில் 45 பல்கலைக்கழகங்களில் தான் மருத்துவ படிப்பில் வழங்குகிறது. மருத்துவ பயிற்சி அமர்வுக்கு சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அதுவும் HHK -4 அளவிற்கு கற்க வேண்டும். இந்த திறன் இல்லாதவர்களுக்கு பட்டம் வழங்கப்பட மாட்டாது. சீனாவில் டாக்டர் தொழில் நடத்துவதற்கு அங்கு அதற்கான உரிமம் பெற வேண்டும். சீனாவில் மருந்தும் படிக்க விரும்பினால் இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றாக வேண்டும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க இது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Livemint News