கேரள NRI ஆர்டர் செய்தது ஐபோன்-12: வந்தது ரூ. 5 நாணயம் !
கேரளாவைச் சேர்ந்த NRI ஒருவர், ஆர்டர் செய்த ஐபோன்-12 இற்கு பதிலாக, சோப்பு தூள் மற்றும் ரூ. 5 நாணயம் வந்துள்ளது.
தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்தியாவில் அனைத்து பரிவர்த்தனைகளும் online மூலமாகத்தான் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் வரை அனைத்தும் இணையம் மூலமாக வாங்க படுகின்றது. இணையம் மூலமாக வாங்கப்படும் இத்தகைய பொருட்களுக்கு பல சமயங்களில் தவறுதலான பொருட்களும் கிடைக்கக்கூடும். அந்த வகையில் தற்போது கேரளாவில் உள்ள NRI ஒருவர் சில தினங்களுக்கு முன்பு, ரூ. 70,900 மதிப்புள்ள ஐபோன்-12 ஐ ஆர்டர் செய்து உள்ளார்.
ஆனால் அவர் நினைத்துப் பார்த்ததில்லை அவருடைய கைகளுக்கு இது கிடைக்கும். ஐபோன்-12க்குப் பதிலாக சோப்பு மற்றும் ரூ. 5 நாணயத்தைப் அவர் டெலிவரியில் பெற்றுள்ளார். NRI நபர் டெலிவரி பாய் முன் தனக்கு கிடைத்துள்ளது சரியான பொருள் தானா? என்பதை சரிபார்ப்பதற்கு அன்பாக்சிங் வீடியோவை உருவாக்கினார். மேலும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது ஐபோன் 12 க்குப் பதிலாக விம் டிஷ்வாஷ் பார் மற்றும் பேக்கேஜுக்குள் ரூ.5 நாணயம் இருப்பதைக் கண்டார்.
ஆப்பிள் ஐபோன் 12க்கு பதிலாக சோப்பும், ரூ.5 காசும் வந்துள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அக்டோபர் 12 அன்று அமீன் ரூ. 70,900 பெரும் தொகையை செலுத்தி ஐபோனை ஆர்டர் செய்தார். தவறுதலாக கிடைத்த ஆர்டரின் பேரில், மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் காவல் நிலையம் விசாரணையைத் தொடங்கியது. ஆர்டர் செய்த நிறுவனத்துடன் போலீசார் பேசுகையில், ஆர்டர் செய்த நபருக்கு பணம் திருப்பித் தரப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
Input & Image courtesy:Zee news