துபாயில் இருக்கும் ஊடகவியலாளருக்கு மனிதநேய பணிக்கான விருது.!

துபாயில் உள்ள தமிழக ஊடகவியலாளருக்கு மனிதநேய பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-14 13:51 GMT

தற்போதுள்ள கால கட்டங்களில் மனிதநேய பணி காக்க பணியாற்றும் பல்வேறு நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது உள்ள நோய் தொற்று காலத்தின் போது பல்வேறு நபர்கள் குடும்பத்தை இழந்து தவிர்த்து வருகிறார்கள். எனவே அவர்களை அடையாளம் கண்டு உதவி செய்பவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 


அந்த வகையில் தற்போது துபாயில் தற்போது தமிழக ஊடகவியலாளர் ஆக பணியாற்றி வரும் முதுவை ஹிதாயத் அவர்களுக்கு மனிதநேய பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனித நேயப் பணிகளுக்கான இந்த விருது காணொலி வழியாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த விருது முன்னாள் ஜனாதிபதி A.P.J.அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 2021+ மணி நேர உலக சாதனை நிகழ்வின் ஒரு பகுதியாக கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவன தலைவர் முனைவர் முகமது முகைதீன் அவர் வழங்கினார். 


தமிழக ஊடவியலாளர் முதுவை ஹிதாயத் அவர்கள், தற்போது வரை மேற்கொண்டு வரும் இறந்தவர்களது உடல்களை நல்லடக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு மனித நேயப் பணிகளின் அனுபவம் குறித்து அபுதாபி கீதா ஸ்ரீராம் கேள்விகளை கேட்டார். இதன் மூலம் பல நிகழ்ச்சிகள் வெளிக்கொணரப்பட்டது. குறிப்பாக பத்திரிகைத்துறை அனுபவம், 15 ஆண்டுகளுக்கு முன்னர் அபுதாபியில் இணையம் வழியாக நடத்தப்பட்ட திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசப்பட்டது.  

Input & Image courtesy:Dinamalar

 


Tags:    

Similar News