பாகிஸ்தானில் 18 மணி நேரம் தொடர்ந்து மின்தடை: மக்கள் அவதி!
பாகிஸ்தானில் தொடர்ச்சியாக 18 மணி நேரம் மின்தடை காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் அவதியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இலங்கை அரசு போலவே தற்பொழுது பாகிஸ்தான் அரசாங்கமும் பொருளாதார நெருக்கடியை தான் இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது எரிபொருள் எரிவாயு பற்றாக்குறை போன்றவற்றில் தட்டுப்பாடு காரணமாக மின் ஆலைகளில் மக்களுக்கு தேவையான மின் உற்பத்தி செய்ய முடியாத ஒரு சூழ்நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ச்சியாக 18 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்தித்து வருகிறது.
நகர்ப்புறங்களில் 6 முதல் 10 மணிநேரம் வரையிலும், கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டுக்கு உள்ளாகிறது என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மின் உற்பத்தி ஆலயங்கள் மக்களுக்கு தேவையான உற்பத்தி செய்ய முடியாத காரணத்தினால் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த நீண்டநேர மின்வெட்டு, தங்களது பணிக்கு இடையூறாக இருப்பதாக சிறு வணிகர்கள் தெரிவிக்கும் வகையில் ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் வெப்பத்தின் காரணமாக மின் பற்றாக்குறை இருக்கும் மக்கள் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவற்றைத் தடுப்பதற்கு கூடிய விரைவில் தாக்கத்தின் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy:Malaimalar news